பிரபல வீடியோ தளமான Youtube வாடிக்கையாளர்கள் எவ்வளவு நேரம் செலவழித்தார்கள் என்பதை தெரிவிக்கும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து கூகிள் நிறுவனம் தெரிவிக்கையில், Youtube வாடிக்கையாளர்கள் ஒரு நாள், ஒரு வாரம் என்னும் வகையில் தங்களது செலவின நேரம் குறித்து அறிந்துக்கொள்ளலாம்.

இதனை எவ்வாறு தெரிந்து கொள்வது

முதலில் உங்கள் Youtube செயலியை அப்டேட் செய்து கொள்ளவும்.

இரண்டாவதாக Youtube-இன் வலதுபுறம் உள்ள உங்கள் Profile-ஐ கிளிக் செய்து கொள்ளவும்.

இதில் Time watched என்பதை கிளிக் செய்யவும்.

இதன் மூலம் Youtube-இல் உங்கள் செலவின நேரம் குறித்து நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் Youtube தனது பயனர்களை கவர இன்னும் பல வசதிகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்