ஏற்கனவே OnePlus 6T குறித்த தகவல்கள் வெளியில் கசிந்த போதிலும் இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது என்று தான் கூற வேண்டும். அதற்கேற்றார் போல் நேற்று டெல்லியில் நடந்த ஒன்ப்ளஸ் 6T யின் அறிமுக விழா இருந்தது. விளம்பரங்களைத் தாண்டி ஒன்ப்ளஸ் இவ்வளவு வாடிக்கையாளர்களை பெற்றதற்குக் காரணம் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான்.

கடந்த மே மாதம், ஒன்ப்ளஸ் 6 மொபைல் போனை அறிமுகப்படுத்திய இந்நிறுவனம் தற்போது ஒன் ப்ளஸ் 6T யை அறிமுகப்படுத்தியுள்ளது, ஒன்ப்ளஸ் 6T கிட்டத்தட்ட ஒன்ப்ளஸ் 6-ல் இருக்கும் அதே அம்சங்களை தான் கொண்டுள்ளது. ஒன்ப்ளஸ் 6-ன் அப்கிரேடுதான் 6T என்பதால் நாம் அதிக மாற்றங்களை எதிர்பார்ப்பதும் நியாயம் இல்லை, ஆனால் விலையில் சிறிய மாற்றம்.

OnePlus 6T மொபைலின் சிறப்பு அம்சங்கள் குறித்து காண்போம்

OnePlus 6T ல் இருப்பது 6.4 இன்ச் 19.5:9 டிஸ்ப்ளே. இதில் AMOLED Full HD+ வகை திரையைப் பயன்படுத்தியிருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம். Qualcomm Snapdragon 845 புராஸசர் இதில் இருக்கிறது. 128GB/256GB இன்டர்னல் மெமரியை கொண்டுள்ளது. இதில் 20 MP + 16 MP உள்ள பின்பக்க கேமரா மற்றும் 16 MP உள்ள முன்பக்க கேமரா உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட்டுடன் வருகிறது.

ஒன்ப்ளஸ் 6-ல் டியூ டிராப் நாட்ச் டிஸ்ப்ளே உள்ளது மேலும் ஒன்ப்ளஸ் 6 ல் 6.28 இன்ச்சாக இருந்த டிஸ்ப்ளே இதில் 6.41 இன்ச்சாக உயர்த்தப்பட்டுள்ளது. நைட்ஸ்கேப் எனும் புதிய வசதியை கூகுள் பிக்ஸலுக்கு அடுத்ததாக ஒன்ப்ளஸ் 6T இல் மிகவும் சிறப்பானதாக கொடுத்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். இதன் மூலம் இரவு நேர படங்களை தெளிவாக எடுக்க முடியும்.

ஒவ்வொரு முறையும், ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தருகிறது அந்த வகையில் தற்போது அறிமுகமாகியுள்ள ஒன்ப்ளஸ் 6T இல் ஹெட் போன் ஜாக்கை நீக்கியிருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம், இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம் அது எப்படி ஹெட் போன் ஜாக் இல்லாமல் பாடல்களை கேட்பதென்று, இதற்காக ஐபோன் X மொபைல் போனில் உள்ளதைப் போன்று சார்ஜிங் போர்ட்டிலேயே ஹெட்போனை பயன்படுத்த முடியுமாம்.

ஒன்ப்ளஸ் 6-ல் 3300 mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டது இதில் பேட்டரியின் அளவு 3700 mAh ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் Smart Boost எனும் தொழில் நுட்பத்தை கேமர்களுக்கென அறிமுகப்படுத்தியுள்ளது ஒன்ப்ளஸ் இதன் மூலம் கேம்கள் எவ்வித தடங்கலும் இன்றி அதிவேகமாக லோடு ஆகுமாம் என உறுதியளிக்கிறது ஒன்ப்ளஸ்.

தற்போது முன்னணியில் உள்ள மொபைல் போன்களில் இருப்பது போன்று ஒன்ப்ளஸ் நிறுவனமும் ஸ்கிரீன் அன்லாக் (இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார்) தொழில்நுட்பத்தை ஒன்ப்ளஸ் 6T இல் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் ஒன்ப்ளஸ் வடிக்கையாளர்களால் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் IP ரேட்டிங் வாட்டர் ப்ரூப் வசதி ஆகியவை இதில் இல்லை.

மேலும் இது 6 GB ரேம் மற்றும் 8 GB ரேம் என இரண்டு வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. 6 GB ரேம் மற்றும் 128 GB இன்டர்னெல் மெமரி கொண்ட ஒன்ப்ளஸ் 6T மொபைலின் விலை ரூபாய் 37,999 எனவும், 8 GB ரேம் மற்றும் 128 GB இன்டர்னெல் மெமரி கொண்ட ஒன்ப்ளஸ் 6T மொபைலின் விலை ரூபாய் 41,999 எனவும், 8 GB ரேம் மற்றும் 256 GB இன்டர்னெல் மெமரி கொண்ட ஒன்ப்ளஸ் 6T மொபைலின் விலை ரூபாய் 45,999 எனவும் உள்ளது.

ஒன்ப்ளஸ் 6T தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதால் இதன் முந்தைய மாடலான ஒன்ப்ளஸ் 6 மொபைல் போனின் விற்பனையை நிறுத்திவிட்டது ஒன்ப்ளஸ் நிறுவனம்.

சரி, உங்களில் யாரெல்லாம் ஒன்ப்ளஸ் 6T மொபைல் போனை வாங்க போகிறீர்கள் மேலும் நீங்கள் எதிர்பார்த்த அம்சங்கள் என்ன, உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்