வாட்ஸாப் செயலிக்குப் போட்டியாக பாபா ராம் தேவ் இந்தியாவில் கடந்த மே மாதம் கிம்போ (Kimbho) என்ற செயலியை அறிமுகப்படுத்தினாா். ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக அச்செயலி மறு நாளே திரும்ப பெறப்பட்டது.

தற்போது மீண்டும் அதனைப் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது, அதைப் பற்றிக் காண்போம்.

கிம்போ என்பது சமஸ்கிருத வாா்த்தை இதற்கு “என்ன நடக்கிறது, என்ன செய்தி” என்று பொருளாம்.

இதில் வாட்ஸாப் செயலியில் இருப்பதைப் போன்று வீடியோ கால், குரூப் கால் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன.

இச்செயலி மீண்டும் இம்மாதம் 27 ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்