சியோமி நிறுவனம் சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன் துணை பிராண்டான POCO வை வெளியிடப்பட்டது.

மேலும் இது தற்போது சியோமி ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் பயன்படுத்தும் வகையில் POCO Launcher ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இதனை Play Store லிருந்து எளிதாக பதிவிறக்கி, பயன்படுத்தக் கொள்ள முடியும்.

மொபைல் செயலியை பதிவிறக்க POCO Launcher

POCO Launcher ஐ சப்போர்ட் செய்யும் மொபைல் போன்கள் Xiaomi Redmi Note 5, Xiaomi Redmi Note 4, Xiaomi Redmi 5, Xiaomi Redmi 6 Pro. இந்த எல்லா சாதனங்களும் Stock software ஐ பயன்படுத்துவதால் POCO Launcher ஐ பயன்படுத்துவது மிகவும் எளிதானது.

ஒருவேளை நாம் இதை விரும்பவில்லை என்றால் மீண்டும் எளிதாக பழைய நிலைமைக்கு மாற்றி விடலாம்.

இக்கட்டுரையில் POCO Launcher கான ஸ்கிரீன்ஷாட்டை இணைத்துள்ளேன், வேறுபாட்டை காணுங்கள்.

POCO Launcher இல் உள்ள சிறப்பம்சங்கள்

செயலிகளை குழுவாக எளிதில் (Group apps by category) வகைப்படுத்தி கொள்ள முடியும்.

மூன்றாம் தரப்பு ஐகான்களை (Customize icons) பயன்படுத்தி தனித்துவமான தோற்றத்தை உருவாக்கி கொள்ள முடியும்.

உங்கள் செயலிகளின் ஐகான்களை மறைத்து, பயன்பாடுகளை தனிப்பட்டதாக (Privacy protection) வைத்திருக்க முடியும்.

கூடுதல் தகவல்:- சியோமியின் புதிய துணை பிராண்டு போகோ

மேலும் இக்கட்டுரைக் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுக்கு பரிந்துரைக்கவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்