பிரபல சமூக வலைத்தளமான கூகுள் பிளஸில் பயனர்களின் தனிப்பட்ட கணக்கு விவரங்கள் திருடுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனம் அதன் கூகுள் பிளஸ் சேவையை மூடுவதாக அறிவித்தது.

இதை தொடர்ந்து ப்ளே ஸ்டோரிலும் கட்டுப்பாடுகளை விதிப்பதாக கூகிள் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் பயனர்களின் முக்கியத் தகவல்கள் வெளியில் லீக் ஆவதை முடிந்தவரை தடுக்க முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது.

நாம் தற்போது நம் மொபைலில் எண்ணற்ற செயலிகளை பயன்படுத்துகிறோம், இவற்றை நாம் முதலில் இன்ஸ்டால் செய்யும் போது இவை நமது எஸ்.எம்.எஸ் மற்றும் கான்டக்ட்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்த நம்மிடம் அனுமதியை கேட்கும், நாம் கொடுக்கவில்லை என்றால் அவற்றை நம்மால் பயன்படுத்த முடியாது.

எடுத்துக்காட்டுக்கு, இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் புக் மை ஷோ, ஸ்விக்கி, பே டிஎம், பிரீசார்ஜ் போன்ற இன்னும் பல செயலிகள் நம்மிடம் OTP என்றோ பெயரிலோ அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காகவோ நம்மிடம் அனுமதியை பெற்று விடும்.

எனவே இனி வரும் கட்டுப்பாட்டில் பயனர்கள் இயல்பாக (Default) பயன்படுத்தும் காலிங் மற்றும் மெசேஜ் செயலிகளுக்கு மட்டும்தான் அனுமதிகள் கொடுக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்துக்குள் இந்த கட்டுப்பாட்டுக்கு துணை புரியாத செயலிகள் உடனே ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படுமாம், மேலும் இதற்கு சரியான காரணங்களை செயலிகளின் நிறுவனங்கள் தெரிவித்தால் அவற்றிற்க்கு மட்டும் விதிவிலக்குகள் தரப்படும் என கூகுள் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 thoughts on “ஸ்விக்கி பிரீசார்ஜ் போன்ற செயலிகளுக்கு எச்சரிக்கை அளித்த கூகுள்”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்