PUBG மொபைல் கேமில் Resident Evil பின்னணியிலான விளையாட்டிற்கு தயாராகுங்கள். டென்செண்ட் கேம்ஸ் (Tencent Games), Capcom நிறுவனத்துடன் இணைந்து Resident Evil 2 என்ற புதிய கேமை கொண்டு வருகிறது. ஆனால், இதற்கான ஒத்துழைப்பு துபாயில் நடைப்பெற்ற PUBG மொபைல் ஸ்டார் சவால் உலகப் போட்டியின் (PUBG Mobile Star Challenge) போது கிண்டல் செய்யப்பட்டது, எனினும் இந்த மாற்றம் ரசிகர்களிடையே உற்சாக அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரப்பூர்வ PUBG மொபைலின் ட்விட்டர் பக்கதில் ஒரு டீஸர் வீடியோ பகிரப்பட்டது, இதில் சாலைகள், சுரங்கங்கள், மற்றும் ஆய்வகங்கள் வழியாக zombies கள் நடந்து வருவதை போன்று காட்டப்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமாக இதில், PUBG Mobile x RE2 இணைப்பு தொடர்பான கூடுதல் விவரங்கள் ஏதும் இல்லை. எனினும் மேலும் தகவல்கள் விரைவில் வெளிவிடப்படலாம் என கருதப்படுகிறது. இருந்த போதிலும் The Resident Evil 2 ஜனவரி 25, 2019 இல் எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டு முயற்சிக்கு PUBG ஒன்றும் புதிதல்ல, சமீபத்தில் PUBG, Suicide Squad உடன் ஆனா Tie-up க்காக டி.சி. நிறுவனத்துடன் (DC Comics) இணைந்திருந்தது. மேலும் டி.சி. நிறுவனத்துடன் புரிந்த ஒப்பந்தத்தின் படி PUBG கேமில் ஜோக்கர் மற்றும் ஹார்லியின் தோற்றத்தை பயன்படுத்தியது PUBG Mobile.

இதைப் போன்று Resident Evil 2 உள்ள ரசிகர்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களான லியோன் கென்னடி (Leon Kennedy) மற்றும் கிளெய்ரே ரெட்பீல்ட் (Claire Redfield) போன்றவர்களின் தோற்றத்தை பயன்படுத்தலாம். உங்களுக்கு டிரெய்லர்கள் மற்றும் டீஸர்களில் உள்ள சிறிய விவரங்களைக் கண்டறியும் சாமர்த்திம் இருந்தால், PUBG Mobile x RE2 டீஸரில் ஒரு ஜாம்பிக்கு எதிராக போராடும் லியோன் கென்னடிவை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆம் இதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மற்ற விவரங்களைப் பொறுத்தவரை, ஜோம்பிஸ்கள் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறதா அல்லது இதற்கென ஏதும் புதிய தனி பயன்பாடு உள்ளதா என்பதனை குறித்த தகவல்களை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. நாங்களும் உங்களைப் போலவே PUBG Mobile வெளிட்ட இந்த அறிவிப்பால் உற்சாகமாக இருக்கிறோம், மேலும் இதற்கான அறிவிப்புகள் மற்றும் விவரங்களுக்கள் அவ்வப்போது PUBG கேமின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்படுகிறது. நீங்களும் இது குறித்த மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள PUBG மொபைலின் ட்விட்டர் பக்கத்தினை பின் தொடரவும்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்