PUBG குறித்து தெரியாதவர்களே இருக்க முடியாது, அந்த அளவிற்கு இதன் தாக்கம் இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, இன்று அனைவருடைய மொபைல் போனிலும் இது தவறாது இடம் பெற்றுள்ளது என்பது நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது, அத்தகைய PUBG கேமின் புதிய சீசன் தற்போது வெளியாகி உள்ளது.

PUBG மொபைல் சீசன் 4 பற்றிய சுவாரசியமான மூன்று முக்கிய கூறுகள் தற்போது வெளியாகி உள்ளன அவற்றைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

PlayerUnknowns Battlegrounds (PUBG) அதன் சீசன் 4 பதிப்பினை அதன் மொபைல் பயன்பாட்டாளர்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. தொடக்கத்தில் இருந்து தரவரிசை கயிறுகளை ஏற தொடங்குவதற்கு இது ஒரு ஸ்லேட் (Slate) போன்ற அமைப்பினை அனைத்து வீரர்களுக்கும் வழங்குகிறது. நவம்பர் 18 அன்று PUBG மொபைல் சீசன் 3 முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து Tencent Games PUBG மொபைல் 0.9.5 புதுப்பித்தலை வெளியிட்டது, அதோடு மட்டுமில்லாமல் தனது சீசன் 4 ஐ துவக்கியுள்ளது. இதனை ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்கு தளங்களில் பயன் படுத்திக்கொள்ளலாம்.

இந்த புதிய சீசனில், புதிய துப்பாக்கிகள், மேம்படுத்தப்பட்ட வரைபடங்கள், புதிய வாகனங்கள் மற்றும் அதிகமான பல புதிய விஷயங்களைப் பார்க்கலாம், PUBG சீசன் 4 இல் நம்மை கவர்ந்த முதல் மூன்று விஷயங்கள் இங்கே,

புதிய அரட்டை அமைப்பு

Tencent Games, PUBG சீசன் 4 இல் முற்றிலும் புதிய ஒரு அரட்டை அமைப்பினை அமைத்துள்ளது, இந்த புதிய அரட்டை அமைப்பு தற்போது பயன்பாட்டில் உள்ள நாம் பயன்படுத்தும் அரட்டை அமைப்பினை விட இலகுவானது, இதனால் மொபைலின் RAM பயன்பாடு குறையும் மேலும் நாம் சாட்டிங்கில் அதிகமான மெசேஜ்களை பெறலாம்.

மேலும் புதிய மேம்படுத்தப்பட்ட Matchmaking செயல்முறையினால், பயனர்கள் ஒரே மொழியை பேசும் கூட்டாளர்களைப் பெற முடியும், இதனால் பயனர்கள் இப்போது இரண்டாவது மொழியினை உள்ளீடு செய்ய வேண்டியதில்லை.

ராயல் பாஸ்

PUBG மொபைல் சீசன் 4 ஐப் பெறுகையில் உங்களுக்கு கூடுதல் நன்மை தேவைப்பட்டால் இந்த ராயல் பாஸ் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதில் Firearm Finishes, Rare outfit rewards, New character faces, Hairstyles மற்றும் Mission cards போன்றவை உள்ளன. மேலும் புதிய பாஸை வாங்கும் வீரர்களுக்கு எலிட் பாஸ் வெகுமதிகளுக்கு 600 UC வழங்கப்படுகிறது.

மேலும் BP அல்லது RP புள்ளிகளுடன் தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்களை வீரர்கள் வாங்குவதற்கு இந்த எலைட் பாஸ் அனுமதிக்கிறது.

ஹார்ட்கோர் பயன்முறை

PUBG மொபைல் வீரர்களுக்கு தெரியும் மற்ற வீரர்களின் அடிச்சுவடு சத்தம். இதற்காக Tencent Games, PUBG சீசன் 4 இல் புதிய ஹார்ட்கோர் பயன்பாட்டு முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹார்ட்கோர் பயன்முறை அனைத்து அடிச்சுவடு ஒலிகளையும் ஆடியோ குறிப்புகளையும் நீக்குகிறது. எனினும், இந்த முறை “Hardcore Week” வடிவத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

கூடுதல் தகவல்:- PUBG இல் வெற்றி பெறுபவர்க்கு கோடிகளில் பரிசு

PUBG மொபைல் 0.9.5 பதிப்பினை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது

PUBG மொபைல் 0.9.5 பதிப்பினை பதிவிறக்க, நீங்கள் Google Play Store அல்லது Apple App Store க்கு செல்ல வேண்டும். இதில் PUBG Mobile என்று தேடவும் பின்னர் தேடல் பட்டியலில் தோன்றும் விளையாட்டு பட்டியலை கிளிக் செய்க, அதன் பிறகு நீங்கள் விளையாட்டின் பிரத்யேக பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். இதில் இன்ஸ்டால் என்பதைக் கிளிக் செய்க, தற்போது உங்கள் ஸ்மார்ட்போனில் PUBG மொபைலின் புதிய பாதிப்பினை நீங்கள் காணலாம்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறோம், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்