PUBG கேம் உலக அளவில் ஒரு மிகப்பெரிய ஹிட் ஆகும், விளையாட்டாளர்கள் தினமும் பல மணி நேரம் தங்கள் நேரத்தை விளையாடுவதற்காக செலவு செய்கிறார்கள்.

இதில் எத்தனை பேருக்கு தெரியும் PUBG இன் மொபைல் ஸ்டார் சலேஞ்ச், இது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

PUBG மொபைல் ஸ்டார் சலேஞ்ச் (Mobile Star Challenge) Tencent Games மற்றும் PUBG Corporation மூலம் நடத்தப்படும் ஒரு உலகளாவிய சாம்பியன்ஷிப் போட்டி. இது PUBG கேம் விளையாடுபவர்களுக்கு இடையே உலகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று வருகின்றது, அவை ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஜப்பான், கொரியா மற்றும் சீனா ஆகிய பகுதிகளில் இதற்கான தகுதிப் போட்டிகள் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன.

PUBG Mobile Star Challenge இன் தலைமை விளம்பரத்தை Samsung Galaxy Note9 பெற்றுள்ளது, இதன் மூலம் பிரபலங்கள், தொழில்முறை விளையாட்டாளர்கள் இப்போட்டியில் அதிகம் பங்கு பெறுகிறார்கள்.

தற்போது இது இறுதி நிலையை அடைந்துள்ளது, வீரர்கள் தங்கள் இறுதி போட்டியாளர்க்களுக்கு எதிராக போட்டியிடுவதற்காக உள்ளனர். இப்போட்டி துபாயில் அடுத்த மாதம் நடைப்பெறப் போகிறது. இந்தப் போட்டியை ESL என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது, இது உலகின் மிகப்பெரிய eSports நிறுவனமாகும், இப்போட்டியை வெல்லும் அணிகளுக்கு பரிசு தொகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தகுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே $20,000, $15,000 மற்றும் $10,000 எனவும் மேலும் இறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே $200,000, $100,000, $50,000 எனவும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

போட்டியின் வடிவமானது, தகுதிப் போட்டிகளில் வெற்றிப் பெரும் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும், வெற்றி பெறும் குழுவிற்கு ரூபாய் 1 கோடியே 46 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் 15,000 க்கும் அதிகமான அணிகள் இதுவரை இப்போட்டிக்கு பதிவு செய்துள்ளன.

கூடுதல் தகவல்:- விளையாட்டு உலகின் புதிய புரட்சி PUBG

இறுதிப் போட்டிக்கு நுழைந்த இரண்டு இந்திய அணிகள்

கடினமான தகுதிகளுக்குப் பிறகு ஆசியாவிலிருந்து 20 அணிகள் ஆசிய இறுதிச் சுற்றிக்கு தகுதி பெற்றன. அந்த இருபது அணிகளில், இந்தியாவில் இருந்து இரண்டு அணிகள் வெற்றிப் பெற்று Asian PUBG Champions பட்டத்தை பெற்றன, வெற்றிப் பெற்ற அணிகளின் பெயர்கள் 8bit மற்றும் Team IND.

PUBG குறித்த சில தெரியாத உண்மைகளைப் பார்ப்போம்

  • ஒரே நேரத்தில் அதிகமானோரால் விளையாடப்பட்ட ஆன்லைன் விளையாட்டாகும். மேலும் இது உலகில் அதிக விற்பனையான விளையாட்டாகவும் உள்ளது.
  • இவர்கள் தங்களின் விளையாட்டை விளம்பரப்படுத்த ஒரு ஒற்றை ரூபாய் கூட இது வரை செலவு செய்தது இல்லை. இது விளையாடப்படுபவர்களால் மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்டது. ஆம்! வாய்மொழி வார்த்தை PUBG மிகவும் பிரபலமாவதற்கு உதவியது என்பதே உண்மை.
  • Winner Winner chicken dinner என்பது அமெரிக்காவின் பழைய நாட்களில் சூதாடிகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்.
  • PUBG ஆனது Player Unknown’s Battleground என அழைக்கப்படுவதற்கு காரணம், இதன் டெவலப்பர்கள் தாங்கள் விளையாடும் கேம்களில் பிளேயரின் பெயரை Unknown என்று வைத்துக் கொள்வார்களாம்.

சரி, இக்கட்டுரையை வாசிப்பவர்களில் எத்தனை பேர் PUBG பிரியர்கள் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு பரிந்துரைக்கவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்