கோரா (Quora) இது ஒரு வினா-விடை வலைத்தளமாகும்.

பல்வேறு தலைப்புக்களில் வினாக்களும் விடைகளும் இங்கு தொகுக்கப்படுகின்றன. நம்மால் இங்கு வினாக்களை உருவாக்கவும், சீரமைக்கவும் (edit) முடியும். அதேபோன்று ஒருவர் அளித்த விடையை மற்றவர் மேம்படுத்தவும், பிழைகளைக் களையவும் முடியும்.

கோரா வலைத்தளத்தை ஜூன் 2009 இல் இரு முன்னாள் பேஸ்புக் ஊழியர்களான Adam D’Angelo மற்றும் Charlie Cheever இணைந்து உருவாக்கினர்.

கோரா (Quora) மற்ற தளங்களில் இருந்து எவ்வாறு வேறு படுகிறது மற்றும் அதன் சிறப்பு அம்சங்களை காண்போம்

கோரா-வில் விடைகளுக்கான மதிப்பீடு பெரும்பாலும் பயனாளிகளால் செய்யப்படுகிறது.

Upvote / Downvote – பயனாளிகள் மற்றவர்களின் விடைகளுக்கு மதிப்பு /வாக்கு போட முடியும். அதிகமாக வாக்கு பெற்ற விடைகள் முதலில் இடம் பெறும்.

Report Answer – பயனாளிகள் கருத்துத் திருட்டு, துன்புறுத்தல், தவறான கட்டுரைகள் போன்றவற்றை குறித்து புகார் அளிக்கலாம்.

Suggest Edits – கட்டுரைகளை மேம்படுத்த பயனாளிகள் பரிந்துரை செய்யலாம்.

கோரா-வில் அனைத்து வினாக்களுக்கான விடைகளும் இடம் பெறுகிறது.

இது மிகப் பெரிய தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவிற்கு போட்டியா கருதப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்