பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு இணையாக தமிழகத்தின் கிருஷ்ணகிரியை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளரான ராஜசேகர் சுந்தரேசன் என்பவர் பிக்சாலைவ் (PIXALIVE) என்ற செயலியை வடிவமைத்துள்ளார்.

இன்றைய நவீன காலத்தில் சமூக வலைதளத்தை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர், அப்படி அதிகமானோர் உபயோகிக்கும் சமூகவலைதளங்களின் பட்டியலில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஹக் மெசஞ்சர் உள்ளிட்ட பல்வேறு இந்தியர்கள் கண்டுபிடித்த செயலிகள் இந்தியாவில் புழக்கத்தில் இருந்தாலும் அவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில் தற்போது பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு இணையாக தமிழகத்தின் கிருஷ்ணகிரியை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளரான ராஜசேகர் சுந்தரேசன் என்பவர் பிக்சாலைவ் (PIXALIVE) என்ற செயலியை வடிவமைத்துள்ளார். இந்த செயலியில் மற்ற சமூக வலைத்தளங்களில் உள்ளதைப் போன்று டெக்ஸ்ட், ஆடியோ, புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை நம்மால் பதிவிட முடியும்.

மற்றும் இதில் நாடு, மக்கள், புகைப்படம், வீடியோ, குரல், உரை மற்றும் ஹாஸ்டேக்குகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்து காட்சி உள்ளடக்கத்தையும் திரையில் உள்ள மூன்று வெவ்வேறு பிரிவுகளான சமீபத்தில் பதிவேற்றப்பட்டவை, பிரபலமானவை மற்றும் ட்ரெண்டிங் ஆகிய தொகுப்புகளின் கீழ் நீங்கள் பார்க்கலாம்.

மேலும் இதில் ஸ்னாப்சாட் செயலில் இருப்பதைப் போன்று, பிக்சாலைவ் (PIXALIVE) செயலியில் பயனாளிகள் பதிவிடும் போஸ்ட்கள் அனைத்தும் ஏழு நாட்களில் மறைந்துவிடும்.

மேலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் இதில் மற்ற செயலிகளில் இல்லாத சிறப்பு அம்சம் ஒன்று உள்ளது, எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் இதில் போட்டோ அல்லது வீடியோவை ஷேர் செய்யும் போது அவற்றை பற்றிய குறிப்பை டெக்ஸ்டாக டைப் செய்யாமல், ஆடியோவாக பதிவு செய்து அனுப்பலாம். இவ்வாறு உலகின் வாய்ஸ் நோட் பதிவு செய்யும் வசதி கொண்ட முதல் சமூக வலைத்தளமாக பிக்சாலைவ் விளங்குகிறது.

பிக்சாலைவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.Pixalive.me

இச்செயலியை அறிமுகப்படுத்திய போது ராஜசேகர் சுந்தரேசன் கூறுகையில், பிக்சாலைவில் தற்போது இருக்கும் அம்சங்களை காட்டிலும் விரைவில் மேலும் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

ராஜசேகர் சுந்தரேசன் குறித்த கூடுதல் தகவலுக்கு Rajasekar Sundaresan – Founder & CEO – Pixalive | LinkedIn

தற்போது ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த செயலி விரைவில் ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகளிலும் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கான பிக்சாலைவ் செயலியை பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும் Pixalive – Apps on Google Play

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்