நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்த்துக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்ப சாதனங்களின் அளவுக்கு அளவே இல்லை, சிலர் வெற்றிப் பெறுகின்றனர், சிலர் தோல்வியை சந்திக்கின்றனர்.

அவ்வாறு புகழின் உச்சியிலிருந்து வீழ்ச்சியை சந்தித்த ஒரு நிறுவனத்தைப் பற்றி காண்போம்.

ஒரு காலத்தில் ஸ்மார்ட் போன் என்றால் அது பிளாக்பெர்ரி (BlackBerry) என்று சொல்லும் அளவுக்கு அதன் வளர்ச்சி இருந்தது, பலரின் முதல் ஸ்மார்ட்போனாக பிளாக்பெர்ரி தான் இருந்து இருக்கும்.

ஆனால் ஐபோனின் (iPhone) வரவிற்கு பிறகு பிளாக்பெர்ரி மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்தது.

பிளாக்பெர்ரி போனால் ஐபோனின் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை உதாரணமாக டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம் மட்டும் IOS இயங்குதளம், இவை மக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

ஆண்டுக்கு மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான பிளாக்பெர்ரி போன்களின் விற்பனை ஆண்டுக்கு சில பல லட்சமாகக் குறைந்தது.

காலத்துக்கு ஏற்றார் போல் பிளாக்பெர்ரி தொழில்நுட்பத்தில் மாற்றங்களை கொண்டு வராததே அதன் வீழ்ச்சிக்கு காரணம்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்