செப்டம்பர் 2016 இல் ஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்குள் கால் எடுத்து வைத்தது, இந்திய சந்தைக்குள் அறிமுகம் ஆனா சிறு நாட்களிலேயே ஜியோ நிறுவனம் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கும் போட்டி கொடுக்க துவங்கியது.

அன்று முதல் இன்று வரை சிறப்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது ரிலையன்ஸ் ஜியோ. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை தன் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுவதற்கு ஜியோ நிறுவனம் பல சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டத்தைக் குறித்து பார்ப்போம்.

ரூபாய் 1699 க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடம் அன்லிமிடெட் இலவச வாய்ஸ் கால் அழைப்புகளை பெறலாம். மேலும் ஒரு வருடத்திற்கு தினமும் 1.5 GB டேட்டா இலவசம்.

மேலும் இந்த திட்டதின் மூலம் நூறு சதவீதம் கேஸ் பேக்கினை பெறும் வாய்ப்பும் உள்ளது. இதில் ரூபாய் 200-க்கான கேஸ்-பேக் கூப்பன் ஒன்றும் மற்றும் ரூபாய் 500-க்கான கேஸ்-பேக் கூப்பன் மூன்றும் கிடைக்கும். மொத்தத்தில் ரூபாய் 1699 க்கு ரீசார்ஜ் செய்தால் ரூபாய் 1700 கேஸ்-பேக். ஆனால் ஒரு கண்டிஷன் இதனை டிசம்பர் 2018 க்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்திட்டம் அக்டோபர் 18 முதல் நவம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே இருக்கும்.

இது தவிர ஜியோவின் பிற திட்டங்களும் கேஸ் பேக் கூப்பன் உள்ளது. சரி, எந்த திட்டத்திற்கு எவ்வளவு கேஸ்-பேக் கூப்பன் வழங்கப்படுகிறது என்பதை காண்போம்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்