எஸ்பிஐ (State Bank of India) வங்கியானது தனது டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்த ஜியோவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் நெட்வொர்க்கான ஜியோ, எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியான யோனோவை (Yono) அதன் வாடிக்கையாளர்கள் ‘மை ஜியோ’ செயலியில் இருந்தே பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.

மேலும் இனி வரும் ஜியோ போன்களில் எஸ்பிஐ-ன் யோனோ செயலி இன்பில்ட்டாகவே இருக்கும் என அறி விக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டணி மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை எளிதாக வழங்க முடியும்.

இதன் மூலம் எஸ்பிஐ பயனாளிகளுக்கு ஜியோ பிரைமில் அதிக சலுகைகள் கிடைக்கும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்