கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். ஆம், இ – ஸ்போர்ட்ஸ் துறையில் நுழைகிறது ஜியோ.

இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம், ஸ்டார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஐந்து வருட ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஜியோ டிவியில் இலவசமாக பார்க்கலாம்.

இவ்வசதியை பெற ஜியோ வாடிக்கையாளர்கள் உங்கள் மொபைலில் ஜியோ டிவி ஆப்பை நிறுவிக் கொள்ளவும்.

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்படும் ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, ஐபில் மற்றும் பிசிசிஐ நடத்தும் உள்ளூர் போட்டிகளை ஜியோ டிவியில் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைப்பெற்ற ஐபிஎல் போட்டிகளை, ஜியோ நிறுவனம் ஹாட்ஸ்டாருடன் இணைந்து இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்