முன்னாள் WWE சாம்பியன் Rock அண்டர் ஆர்மர் (Under Armour) மற்றும் JBL நிறுவனத்துடன் இணைந்து வயர்லெஸ் ஹெட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

WWE மூலம் உலகப் புகழ் பெற்ற ராக் பின்பு ஹாலிவுட்டுக்கு சென்று பல படங்களில் நடித்துள்ளார், அவர்  நடித்த படங்கள் உலகெங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், மல்யுத்தத்தைக் கைவிட்டு முழு நேர நடிகராக மாறியுள்ளார்.

இந்நிலையில் அண்டர் ஆர்மர்  நிறுவனம் ராக்குடன் இணைந்து, ராக் தனது வலது கையில் பச்சை குத்தியிருக்கும் காட்டெருமையின் முகத்தைப் பொரித்த ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது ஜிம்மில் வொர்கவுட் செய்யும்போது அணிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்படுள்ளது.

மேலும் இந்நிறுவனம் காட்டெருமையின் முகத்தைப் பொரித்த டி- சர்டுகள், டிராக் பாண்ட்ஸ், ஷார்ட்ஸ் என்று அனைத்து வகையான விளையாட்டு ஆடைகளையும் விற்று வருகிறது.

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஹெட்போன்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்