ஒரு பெரிய நடிகர் நடித்த படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் யூடியூப்பில் வந்துவிட்டால் போதும் சமூகவலைத் தளங்களில் அவர்களின் ரசிகர்களிடையே பெரிய யுத்தமே நடக்கும், யார் அதிக லைக்ஸ், வியூஸ் பெற்றுளார்கள் என்பதில்.

சில நேரங்களில் வியூஸ் குறைவாக இருந்து லைக்ஸ் அதிகமாக இருக்கும், உடனே எதிர்த்தரப்பினர் இது ஏமாற்று வேலை என்று குறைக்கூற ஆரம்பித்துவிடுவார்கள், இதற்கான காரணம் என்ன? யூடியூப்பின் அல்கோரிதம்(Algorithm) எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

சில நேரங்களில், அளவுக்கு அதிகமானப் பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட வீடியோவை அதன் குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க வருகையில் உண்மையான வியூஸ் எது, செயற்கையாக கம்ப்யூட்டர்கள் மூலம் ஏற்றப்படும் வியூஸ் எது எனத் தீர்மானிப்பதற்கு போதிய நேரம் யூடியூப்பிற்கு கிடைக்காது. இவ்வேளைகளில் வியூஸ் எண்ணிக்கை அப்படியே ப்ரீஸ் ஆகிவிடும்.

பின் யூடியூப்பின் சில சோதனைகளுக்குப் பிறகு உண்மையான மனிதர்களால் பார்க்கப்பட்ட வியூஸ்களின் எண்ணிக்கை கண்டறியப்பட்டு அது மொத்த எண்ணிக்கையில் சேர்க்கப்படும்.

யூடியூப்பின் அல்கோரிதத்தில் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்க்கு எவ்வித சிக்கலும் இல்லை.

இதுப் போன்ற ஒரு சிக்கலைத் தான் தற்போது விஜயின் நடிப்பில் வெளிவந்த சர்கார் டீசருக்கு நிகழ்ந்தது, தற்போது இதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் பற்றி தெரிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

மேலும் இக்கட்டுரைக் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுக்கு பரிந்துரைக்கவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்