பாரத ஸ்டேட் வங்கியில் நெட் பாங்கிங் சேவையை பயன்படுத்துவோர் டிசம்பர் 1-ம் தேதிக்குள் தங்களின் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு எஸ்பிஐ வங்கியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இல்லையெனில் எஸ்பிஐ இன் இணையதள வங்கி சேவை துண்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையின் படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சரி, பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள வங்கி சேவையில் நம்முடைய மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று எவ்வாறு தெரிந்துகொள்வது

Step 1: முதலில் எஸ்பிஐ இன் இணையதளத்திற்கு செல்க onlinesbi.com

Step 2: கடவுச்சொல் மற்றும் உங்கள் விவரங்களை உள்ளிடவும்.

Step 3: உள் சென்று My Account and Profile என்பதை கிளிக் செய்யவும்.

Step 4: இதில் Profile-ஐ கிளிக் செய்யவும்.

Step 5: இப்போது Personal Details/Mobile என்பதை கிளிக் செய்யவும்.

Step 6: பின் Profile password ஐ உள்ளிடவும்.

வெற்றிகரமாக உள்ளே நுழைந்தவுடன், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி (ஏற்கனவே பதிவு செய்திருந்தால்) காண்பிக்கப்படும்.

இல்லையென்றால் நேரடியாக வங்கி கிளைக்குச் சென்று மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி சார்ந்த விவரங்களைச் சமர்ப்பித்துப் பதிவு செய்ய வேண்டும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்