கூகுளின் Snapseed மிகவும் பிரபலமான புகைப்பட எடிட்டிங் செயலிகளில் ஒன்றாகும், இதன் சக்திவாய்ந்த கருவிகள் (Powerful tools) மற்றும் வடிகட்டிகள் (Filters) பயனாளிகளின் வேலைகளை மிகவும் எளிதாக்குகிறது.

இதற்கு போட்டியாக மற்றோரு எடிட்டிங் செயலியான PicsArt சிக்கல்கள் இல்லாத தெளிவான எடிட்டிங் கருவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறது.

இவ்விரண்டையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

முதலில் வடிகட்டிகள் (Filters) பற்றிப் பார்ப்போம், Snapseed இல் உள்ள வரையறுக்கப்பட்ட வடிப்பான்களை எதிர்த்து, PicsArt உங்கள் புகைப்படங்களுக்கு எண்ணற்ற வடிப்பான்களை கொடுக்கிறது.

புகைப்படத்தின் வடிவம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை என்றால் எடிட்டிங் கருவிகளைக் கொண்டு ஒரு படத்தை சரிசெய்ய முடியும், PicsArt செயலியை ஒப்பிட்டு பார்க்கையில் Snapseed அதிகமான எடிட்டிங் கருவிகளைக் கொண்டுள்ளது.

புகைப்படத்தின் பின்னணியை மாற்றுதல் PicsArt இன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

மேலும் இந்த இரண்டு செயலிகளும் Frames, Double Exposure, Lens Blur effects போன்ற பிற அம்சங்களையும் கொண்டிருக்கின்றன.

இறுதியில் தீவிரமான புகைப்பட எடிட்டிங் இருந்தால் Snapseed சிறந்த தேர்வாக இருக்கும், எளிமையான முறைக்கு PicsArt செயலியை முயற்சி செய்யலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்