உலகின் மிகப்பெரிய மற்றும் மிக சக்திவாய்ந்த ஆன்லைன் இசை ஸ்ட்ரீமிங் சேவையான Spotify இறுதியாக இந்தியாவிற்கு வருகிறது. இது வெறும் வதந்தி இல்லை.

Spotify, 18 க்கும் அதிகமான நாடுகளில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. இப்போது, ​​இவர்களின் அடுத்த பெரிய சந்தை இந்தியா, மற்றும் இவர்கள் இதற்கான அடித்தளத்தை இந்தியாவில் அமைத்து வருகின்றன. தற்போதைய தகவல்களின் படி, 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அல்லது அடுத்த 6 மாதங்களில் இந்தியாவில் Spotify அறிமுகப்படுத்தப்படும்.

மேலும் இதற்காக Spotify இந்தியாவில் உள்ள மிகப்பெரிய இசை நிறுவனங்களுடன் பேசி வருகிறது, குறிப்பிட்டு சொல்ல போனால் உலகின் மிகப் பெரிய யூட்டூப் சேனல் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய இசை உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றான T-Series உடன் பங்குபெற ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் டி-சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பூஷண் குமார், Spotify உடன் இந்த கூட்டணியை உறுதிப்படுத்தினார்.

கூடுதல் தகவல்:- உலகின் அதிகமான சந்தாதாரர்களை கொண்ட யூடுப் சேனல்

Spotify இந்தியாவிற்கு வர ஏன் இந்த தாமதம்

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம், குறிப்பாக ஜியோவின் வருகைக்கு முன் இன்டர்நெட் என்பது பெரும்பாலோனோர்க்கும் பெரும் தடையாக இருந்தது, ஆனால் இப்போது இது நீக்கப்பட்டு விட்டது. நம் இன்று இன்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துகிறோம். இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உயர் வேக இன்டர்நெட் வசதி இப்போது உள்ளது, எனவே இதுவே தற்போது இந்தியாவில் Spotify யை அறிமுகப்படுத்துவது சரியான நேரம் என்று அந்நிறுவனம் கருதுகிறது.

இது தவிர, சில சச்சரவுகளும் இருந்தன. உதாரணமாக, டி-சீரிஸ் மற்றும் சோனி மியூசிக் போன்று இசைக்கலைஞர்கள் மற்றும் இசைக்குழுக்களை கொண்டு தன்னுடைய நிறுவனத்தில் பாடல்களை பாடுவதற்கு மற்றும் வெளியிடுவதற்கும் Spotify முயற்சி செய்தது. ஆனால் தற்போது அதனை கைவிட்டு, இப்போது ​​Spotify இசை உற்பத்தி நிறுவனங்களுடன் பங்குபெற முடிவு செய்திருக்கிறது, எனவே இது தற்போது Spotify க்கு பாதுகாப்பான வழியாக இருக்கும். எதிர்காலத்தில், Spotify பிற இசைக்கலைஞர்களுடனும் பங்குபெறலாம்.

கூடுதல் தகவல்:- இசைக்கென ஒரு இணையத்தளம்

தற்போது Spotify இந்தியாவிற்கு வர காரணம் என்ன

இன்டர்நெட்டை அதிகமானோர் பயன்படுத்தும் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது, எனவே Spotify தனது தொழில் வெற்றி பெற இந்தியாவை புறக்கணிக்க முடியாது, மேலும் குறிப்பாக இந்தியாவில் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் ஸ்ட்ரீமிங் சேவைகளை பயன்படுத்துகிறார்கள். எனவே இந்திய சந்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் ஆன்லைன் இசை ஸ்ட்ரீமிங் தொழில் இந்தியாவில் $ 200 மில்லியன் மதிப்புள்ளதாகும்.

மறுபுறம், ஜூலை மாதத்தில் இருந்து Spotify யின் வருவாய் உலகளாவிய அளவில் 30 சதவீதம் குறைந்துவிட்டது, இதனால் இதன் முதலீட்டாளர்கள் அமைதியற்றவர்களாகி வருகின்றனர். அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவை Spotify இன் மூன்று பெரிய சந்தைகளாகும், ஆனால் இப்போது, ​​இந்திய பாடலைப் பாடுவதற்கான நேரம் வந்துவிட்டது. மேலும் இது தற்போதைய சந்தைத் தலைவர்களாக உள்ள Gaana, Saavn மற்றும் Amazon Prime Music க்கு ஈடுக்கொடுக்க முடியுமா என்பதை பார்ப்போம்.

கூடுதல் தகவல்:- சிறந்த ஆப்லைன் மியூசிக் பிளேயர்கள்

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்