இன்று எங்கு பார்த்தாலும் அனைவரிடமும் ஆண்ட்ராய்டு மொபைல் தான், ஆண்ட்ராய்டின் வேர்ச்சன்களான ஜெல்லி பீன், லாலி பாப் மற்றும் ஓரியோ குறித்து அனைவரும் அறிந்ததுதான், சிலர் ஸ்டாக் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு ஒன், ஆண்ட்ராய்டு கோ குறித்து கேள்விப்பட்டு இருப்பீர்கள், இவை என்ன என்பது குறித்து உங்களுக்கு சந்தேகம் எழலாம், இவற்றைக் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு வேர்ச்சன்களின் வரலாறு , நவம்பர் 2007 இல் பீட்டா பதிப்புடன் தொடங்கியது. ஆண்ட்ராய்டு வேர்ச்சன்களின் பெயரை ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசைப்படி பதிப்பு பெயராக வைக்கும் வித்தியாசமான வியாபார அணுகுமுறையை அதன் மூன்றாவது பதிப்பிலிருந்து தொடங்கியது கூகுள் நிறுவனம். இதில் 1.0 மற்றும் 1.1 பதிப்புகள் விதிவிலக்கானவை.

 • ஆண்ட்ராய்டு ஆல்பா பதிப்பு (1.0)
 • ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு (1.1)
 • ஆண்ட்ராய்டு கப் கேக் (1.5)
 • டோனட் (1.6)
 • ஆண்ட்ராய்டு எக்லேர் (2.0-2.1)
 • ப்ரையோ (2.2-2.2.3)
 • ஜிஞ்சர் ப்ரெட் (2.3-2.3.7)
 • ஹனி கோம்ப் (3.0-3.2.6)
 • ஐஸ்கிரீம் சாண்ட்விச் (4.0-4.0.4)
 • ஜெல்லி பீன் (4.1-4.3.1)
 • ஆண்ட்ராய்டு கிட்கேட் (4.4–4.4.4)
 • லாலிபாப் (5.0–5.0.2, 5.1-5.1.1)
 • மார்ஷ்மலோவ் (6.0–6.0.1)
 • ஆண்ட்ராய்டு நுகட் (7.0)
 • ஆண்ட்ராய்டு ஓரியோ (8.0-8.1)
 • ஆண்ட்ராய்டு பை

கூடுதல் தகவல்:- ஆண்ட்ராய்டு வேர்ச்சன்கள்

அண்ட்ராய்டின் சமீபத்திய பதிப்பு அண்ட்ராய்டு 9 பை ஆகும், இது ஆகஸ்ட் 2018 இல் வெளியிடப்பட்டது.
மேலும் தற்போது வெளியிடப்படும் ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் எல்லாம் அந்தந்த மொபைல் நிறுவனங்களால் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு OS-களே

கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷன்களின் Source Code-களை யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது, இதனால் இந்த Source Code-களை மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்றார் போல் சில மாற்றங்களை ஏற்படுத்தி தங்களின் மொபைல் போன்களில் அவற்றைச் செயல்படுத்துகின்றன. எடுத்துக்காட்டுக்கு நாம் அனைவரும் அறிந்த ஒன்பிளஸ் நிறுவனத்தின் OxygenOS.

சில சமயங்களில் இவை நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், மொபைலின் செயல்பபாட்டு திறன் குறையலாம், அப்டேட்கள் உடனடியாக கிடைக்காமல் இருக்கலாம். இதற்காகவே கூகுள் நிறுவனம் சில மாற்றங்களுடன் ஆண்ட்ராய்டு ஒன் மற்றும் ஆண்ட்ராய்டு கோ பதிப்புகளை அறிமுகப் படுத்தியது.

ஸ்டாக் ஆண்ட்ராய்டு

கூகுள் நிறுவனம் எப்படி வெளியிடுகிறதோ அப்படியே தான் இவை இருக்கும், இவற்றில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படுவதில்லை, இதனால் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்படும் அப்டேட்கள் உடனடியாக கிடைக்கப் பெறும். எடுத்துக்காட்டுக்கு நெக்சஸ் மற்றும் பிக்ஸல் மொபைல்கள். இவை கூகுள் நிறுவனத்தின் மொபைல் போன்கள் என்பதால் இவை ஸ்டாக் ஆண்ட்ராய்டினை கொண்டு வருகின்றன. இவை தவிர ஒரு சில மொபைல் போன்களில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு பயன்படுத்தப் படுகிறது. ஸ்டாக் ஆண்ட்ராய்டினை பயன்படுத்துவதற்கு மொபைலின் ஹார்ட்வேர் சிறந்ததாக இருக்க வேண்டும், இல்லையெனில் போன் கொஞ்சம் தடுமாறும்.

மற்ற மொபைல் போன்களை நீங்கள் வாங்கும் போது அதில் தேவையில்லாத செயலிகள் இருப்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள், நாம் அவற்றை அன்இன்ஸ்டால் கூட செய்யவும் முடியாது. ஆனால் இவை கூகுள் நிறுவனத்திடமிருந்து நேரடியாக வருவதால் தேவையில்லாத செயலிகள் இருக்க வாய்ப்பில்லை.

எடுத்துக்காட்டுக்கு:-

இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள்

 1. Google Pixel 2 XL (64 GB)
 2. Motorola Moto Z2 Force
 3. Google Pixel 2 (64GB)
 4. Motorola Moto X4
 5. Nokia 8

ஆண்ட்ராய்டு ஒன்

கூகுள் நிறுவனத்தால் 2014 ஆம் ஆண்டு, குறிப்பாக மிட் ரேன்ஜ் மொபைல்களுக்கு என்று அறிமுகப்படுத்தப்பட்டது, இதிலும் கூகுள் நிறுவனத்தின் அப்டேட்கள் உடனுக்குடன் கிடைக்கும், ஸ்டாக் ஆண்ட்ராய்டுக்கும் இதற்கும் இருக்கும் ஒரு வேறுபாடு என்னவென்றால் இது ஆண்ட்ராய்டின் Open source Project டில் வராது. எனவே கூகுள் நிறுவனத்திடம் ஒப்பந்தத்தில் இருக்கும் மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே தான் இந்த ஆண்ட்ராய்டு ஒன் சேவையை பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த ஆண்ட்ராய்டு ஒன் மொபைல் போன்கள்

 1. Motorola One Power
 2. Xiaomi Mi A2
 3. Nokia 3.1
 4. Nokia 6
 5. Nokia 7 Plus

ஆண்ட்ராய்டு கோ

இது குறைந்த விலை மொபைல் போன்களுக்கு என வடிவமைக்கப்பட்டது, மேலும் இதனை 512 MB அல்லது 1 GB RAM வசதிக் கொண்ட மொபைல் போன்களில் எவ்வித பிரச்னையுமின்றி பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு கோ மொபைல் போன்களுக்கு கூகுள் செயலிகளின் லைட் வெர்ஷன்கள் கிடைக்கும். இவற்றில் நாம் முழு வசதிகளையும் எதிர்பார்க்கமுடியாது.

இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த ஆண்ட்ராய்டு கோ மொபைல் போன்கள்

 1. Nokia 2.1
 2. Nokia 1
 3. Samsung Galaxy J2 Core
 4. Lava Z61
 5. Micromax Bharat Go

தற்போது ஸ்டாக் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு ஒன் மற்றும் ஆண்ட்ராய்டு கோ குறித்து ஓரளவு அறிந்து இருப்பீர்கள். இவற்றில் எது சிறந்தது என்று நீங்கள் கேட்கலாம், ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொபைல் வகைக்கேற்ப அதன் செயல் திறனுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சரி, உங்களில் யார் எந்த ஆண்ட்ராய்டு பதிப்பினை பயன்படுத்துகின்றீர்கள் உங்கள் பதிலை எங்களுக்கு கமெண்ட் மூலம் தெரியப்படுத்தவும்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறோம், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்