இந்தியாவில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கு ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் டெலிவரி நிறுவனமான சுவிகி, தெற்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய தொழிற்நுட்ப நிறுவனமாக Naspers உடன் இணைந்து 7,000 கோடிகளை (1 பில்லியன் டாலர்) முதலீடு செய்ய உள்ளது. என்னது ஏழாயிரம் கோடியா !

இந்தியாவின் பெங்களூரை தலைமையகமாக கொண்டது சுவிகி நிறுவனம். இதன் உரிமையாளர்கள் சீனாவின் டெக் ஜாம்பவான்களான DST Global மற்றும் Coatue Management, ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் சுவிகியில் முதலீடு செய்து உள்ளன, இதற்கெல்லாம் மேலாக தற்போது தொழிற்நுட்ப நிறுவனமாக Naspers 7,000 கோடிகளை முதலீடு செய்ய உள்ளது. இது சுவிகியின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உதவும் என பெரிதும் எதிர்பாக்கப்படுகிறது. எனினும் சுவிகியின் தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

சுவிகியின் தடுக்க முடியாத வளர்ச்சி தொடர்கிறது

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வலிமையான ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனமாக உருவாகியிருக்கிறது சுவிகி. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பில்லியன் டாலர் மார்க் என்பது மிகவும் முக்கியம். அதாவது அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலரை எட்ட வேண்டும் என்பது இலக்கு (கிட்டத்தட்ட 7000 கோடி).

இதனை முதன்முதலில் இந்தியாவில் எட்டியது ப்ளிப்கார்ட் நிறுவனம் ஆனால் அதற்கு ஆறு ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. ஆனால் சுவிகி இந்த இலக்கைத் தொட 4 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தையே எடுத்திருக்கிறது.

சுவிகி ஏற்கெனவே ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கு ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்து வருகிறது, இது மேலும் விரிவு படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மற்றும் சுவிகி தன்னுடைய செயலில் தற்போது 50,000 மேற்பட்ட உணவகங்களை இணைந்துள்ளது, மேலும் இது அதிகரிக்கப்படும்.

குறிப்பாக இந்த ஆண்டு சுவிகியின் தினசரி ஆர்டர்கள் மட்டும் பத்து மடங்கு அதிகரித்துள்ளன. மேலும் இது இந்தியாவில் ஓலா மற்றும் ஸோமாட்டோ ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக களத்தில் உள்ளது.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்