Swedish YouTuber Felix PewDiePie Kjellberg என்பவர் வேறு எந்த YouTube சேனலை விடவும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளார். ஆனால் இது விரைவில் மாறப்போகிறது.

தற்போது PewDiePie யூடுப் சேனல் 65 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளது. ஆனால் T-Series என்ற யூடுப் சேனல் 60 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இது PewDiePie விட வேகமாக வளர்ந்து வருகிறது.

டி-சீரிஸ் என்பது புது தில்லியில் உள்ள இசை மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். இதில் பெரும்பாலும் பாலிவுட் இசை வீடியோக்கள் இடம் பெறுகின்றன.

T-Series சேனல் சராசரியாக ஒவ்வொரு நாளும் 1,41,000 புதிய சந்தாதாரர்களை பெறுகிறது. மாறாக PewDiePie சேனல் 29,000 சந்தாதாரர்களை பெறுகிறது.

PewDiePie சேனலில் பெரும்பாலும் வீடியோ கேம்களின் விமர்சனங்கள் இடம் பெறுகின்றன.

 

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்