தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், விங்ஸ் (WINGS) என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் சிம் இல்லாமல் கால் செய்ய முடியும்.

WINGS எனும் செயலியை பயன்படுத்தி, இணையதள Wifi மூலம் அழைப்புகளை ஏற்கலாம்.

இதற்கு முதலில் WINGS எனும் செயலியை உங்கள் மொபைல் போன் அல்லது லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். இது உங்களுக்கு பத்து இலக்க எண்களை கொடுக்கும். இந்த எண்கள் மூலம் நீங்கள் பேசலாம்.

உதாரணமாக வாட்ஸ் ஆப், அழைப்புகளை போன்றது. ஆனால் நீங்கள் வாட்ஸ் ஆப் செயலில் உங்கள் நண்பருக்கு call செய்ய வேண்டும் என்றால் அவரும் கட்டாயம் இணைய இணைப்பை பெற்றிருக்க வேண்டும், ஆனால் விங்ஸ் சேவையில் எதிர் தரப்பில் உள்ளவருக்கு இணைய இணைப்பு என்பது கட்டாயம் இல்லை.

இது இந்தியாவின் முதல் இணைய டெலிபோன் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வசதி வரும் 25ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆண்டுக்கு ரூ.1099 என்று BSNL நிறுவனத்தால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்