கேம்கள் மூலம் உலக அளவில் பல மில்லியன் டாலர்களுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா, ஆம் நீங்கள் நம்பி தான் ஆகா வேண்டும், நாம் யாவரும் அறிந்த ஹாலிவுட்டுக்கு நிகராக பலரும் தனது உழைப்பினைக் கொடுத்து கேம்களை உருவாக்குகின்றனர். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டில் மிகப் பெரிய வெற்றியினை பெற்ற சிறந்த கேம்களை குறித்து இக்கட்டுரையில் பார்ப்போம்.

1. Fortnite Battle Royal

2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த Fortnite கேம், வெளியான சில நாட்களிலேயே யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு மிகப் பெரிய வெற்றியினை பெற்றது. இதனை வடிவமைத்தவர்கள் Epic Games நிறுவனத்தினர். கணினிகளுக்கு என முதலில் வடிவமைக்கப்பட்ட இந்த Fortnite கேம், அதன் வெற்றிக்கு பின்னர் சில மாற்றங்களுடன் 2018-ம் ஆண்டு ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் இயங்குதளங்களிலும் Fortnite Battle Royale என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இது தற்போது ஸ்மார்ட் போன்களிலும் முன்னணி கேமாக இருந்து வருகிறது.

2. EA FIFA 2019

உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து என்பதனை யாவரும் அறிந்ததே, எனவே இதனை அடிப்படையாக கொண்டு EA sports நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட கேம் தான் FIFA, ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் FIFA கேமின் புதிய பதிப்புகள் வெளியாகி உலகளவில் ஸ்போர்ட்ஸ் கேம்களின் டிரெண்ட் செட்டராக இருக்கும், அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான EA FIFA 2019 என்ற கேம், கேம் பிரியர்களுக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாக அமைந்தது.

3. RedDead Redemption 2

2010-ல் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற RedDead Redemption கேமின் இறுதிப்பாகம் தான் இந்த RedDead Redemption 2. உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட, கேமிங் வேர்ல்டையே கலக்கிய Grand Theft Auto(GTA) கேமை வடிவமைத்த Rockstar நிறுவனம்தான் இந்த RedDead Redemption கேமையும் வடிவமைத்தது. இந்த கேமை மற்ற கேம்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சுவாரஸ்யமானது, ஏனென்றால் இதன் களம் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த Cowboy Gang மனிதர்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது. மேலும் இந்த RedDead Redemption 2 வெளியான குறுகிய நாட்களிலே மிகப் பெரிய வெற்றியினை பெற்று மற்ற முன்னணி கேம்களைத் தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

4. God Of War

ஸ்போர்ட்ஸ் கேமுக்கு என்று EA FIFA இருப்பது போன்று, ஆக்ஷன் கேம் பிரியர்களுக்கு என்று இருப்பதுதான் இந்த God Of War கேம், இதன் சண்டை காட்சிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் அளவிற்க்கு இதனை வடிவமைத்துள்ளனர் Santa Monica studio என்ற நிறுவனத்தினர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இந்த கேம் இதற்கு முன்னர் வெளியான God Of War கேம்களின் தொடர்ச்சி தான். மேலும் இது வெளியான சில நாட்களிலேயே உலகம் முழுவதும் பிரபலமடைந்து, இதன் கேம் சிடிக்கள் மளமளவென்று விற்றுத் தீர்ந்தது இந்த கேமின் வெற்றியை குறிக்கிறது.

5. PUBG

2018-ல் வெளியான கேம்களில் அனைவருக்கும் பிடித்த கேமாக உள்ளது PUBG என்று அழைக்கப்படும் Player Unknown Battle Ground கேம். இன்று யாரை பார்த்தாலும் அனைவருடைய மொபைல் போன்களிலும் பப்ஜிதான். அந்த அளவிற்கு இதன் தாக்கம் அனைவரையும் பாடாய் படுத்துகிறது, இந்த கேமினை வடிவமைத்தது தென் கொரியாவைச் சேர்ந்த Bluehole என்ற நிறுவனம், இந்த கேமினை வடிவமைத்த இந்நிறுவனமே இதன் இமாலய வெற்றியை எதிர்பார்க்க வில்லை, அந்த அளவிற்கு உலகின் அனைத்து பகுதிகளிலும் இந்த கேம் விளையாட்டுப்படுகிறது, தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த கேம், உலகில் அதிகமானோரால் டவுன்லோட் செய்யப்பட்ட கேமாகவும் உள்ளது.

இவற்றை தவிர வேறு ஏதும் உங்களுக்கும் விருப்பமான கேம்கள் உள்ளனவா, உங்கள் கருத்துக்களை எங்களுக்கு கமெண்ட் மூலம் தெரியப்படுத்துங்கள்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

2 thoughts on “மெர்சல்காட்டிய இந்த ஆண்டின் சிறந்த வீடியோ கேம்கள் 2018”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்