தொழில்நுட்ப புரட்சியின் மையத்தில் ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன, ஆனால் எந்த தயாரிப்பாளரும் எதையும் முயற்சிக்கவில்லை. ஒரு நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது என்றால், அதனையே தான் மற்ற நிறுவனங்களும் பின் தொடர்கின்றன. எடுத்துக்காட்டுக்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Notch அம்சம் இதனை தான் மற்ற நிறுவனங்களும் பின்பற்றின.

ஆனால் 2018 வேறுபட்டது, இந்த ஆண்டு சில அற்புதமான சிறப்பு அம்சங்களை கொண்ட மொபைல் போன்களை பார்க்க முடிந்தது. In-Display Fingerprint Sensor முதல் 5G வரை அறிமுகப்படுத்தப்பட்டன. எனவே இது புதுமையான தொழில்நுட்பங்களின் வருடமாக அமைந்தது. இக்கட்டுரையில் 2018 ஆம் ஆண்டு மொபைல் போன்களில் வெளியான சில சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

In-Display Fingerprint Sensor

இந்த ஆண்டு சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ In-Display Fingerprint Sensor அம்சத்தை கொண்ட முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டது, தற்போது, ​​மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களான Huawei, Oppo, Xiaomi மற்றும் OnePlus நிறுவனங்களும் இந்த அம்சத்தை தங்களின் மொபைல் போன்களிலும் பயன்படுத்துகின்றன.

Google Duplex

கூகிள் டூப்ளெக்ஸ் இதுவரை வந்த தொழில்நுட்பங்களிலேயே மிகப்பெரிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இது மனிதனின் செயல்பாடுகளை ஒத்தது, இதில் Artificial intelligence (AI) என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. விரைவில் ஸ்மார்ட்போன்களும் மற்றும் call centers களும் இதன் மூலம் இயக்கப்படலாம்.

3D Displays

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Red Hydrogen One, உலகின் முதல் 3D holographic டிஸ்பிளேயினை கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இதில் திரையில் காண்பிக்கப்படும் 3D காட்சிகளை, 3D கண்ணாடிகளை பயன்படுத்தாமலே கண்டு ரசிக்க முடியும்.

In-Display Cameras

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் இந்த அம்சத்தை தங்களின் மொபைல் போன்களில் அறிமுகப்படுத்தப் கடினமாக முயன்று வருகின்றன. ஆனால் Huawei நிறுவனம் In-Display கொண்ட கேமராவினை தனது Nova 4 இல் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் 48MP Sony IMX 586 sensor பயன்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சாம்சங் நிறுவனமும் தனது Galaxy A8 இல் இந்த In-Display Cameras அம்சத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Reverse Wireless Charging

முதன் முதலாக Huawei Mate 20 Pro வில் ஒரு சிறப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது அது தான் Reverse Wireless Charging. பிற முன்னணி சாதனங்களிலும் இந்த அம்சம் அதிகமாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. காரணம், wireless முறையில் பயனர்கள் தங்களின் மொபைல் போனை எளிதாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

Reverse Wireless Charging எவ்வாறு வேலை செய்கிறது

இதற்கு இரண்டு மொபைல் சாதனங்களும் wireless charging அம்சத்தினை கொண்டிருக்க வேண்டும். இதன் மூலம் ஒரு சாதனத்திலிருந்து மற்றோரு சாதனத்தை சார்ஜ் செய்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டுக்கு Huawei Mate 20 Pro மொபைல் போனிலிருந்து iPhone X.

Quad Camera Setups

இப்போது பயன்படுத்தப்படும் இரண்டு மற்றும் மூன்று கேமராக்களை தாண்டி, நாம் விரைவில் குவாட் கேமரா அமைப்புகளை கொண்ட மொபைல் போன்களின் உலகில் நுழைய போகிறோம். தற்போது சாம்சங் நிறுவனம் Galaxy A9 என்ற நான்கு கேமராக்களை கொண்ட மொபைல் போனினை வெளியிட்டது. விரைவில் மற்ற நிறுவனங்களும் குவாட் கேமரா அமைப்பினை தங்களின் மொபைல் போன்களில் அறிமுகப்படுத்த உள்ளன.

10GB & 12GB RAM

ஷியோமி தான் 10GB ரேம் வசதியினை கொண்ட ஸ்மார்ட்போனை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனம் ஆகும். இந்த அம்சம் ஷியோமியின் Mi MIX 3 போனில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து OnePlus 6T McLaren Edition போனும் 10GB ரேமினை கொண்டு வருகிறது. சமீபத்தில் Lenovo Z5 Pro, 12GB RAM வசதியினை கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிடும் என உறுதிஅளித்துள்ளது.

5G Technology

5G தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. ஆனால் மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் 5G தொழில்நுட்பத்தை தங்களில் மொபைல் போன்களில் செயல்படுத்தத் தொடங்கிவிட்டனர். 2019 ஆம் ஆண்டில் Flagship phones இந்த அம்சம் அதிகமாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Foldable Phones

இறுதியில், Foldable Phone-கள் 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இதை சீனாவின் ஸ்டார்ட்அப் நிறுவனமான Royole beat அறிமுகப்படுத்தியது. 7.8 இன்ச் மடிப்புகளுடனான இந்த டேப்லெட்-போன் உலகின் முதல் Foldable Phone ஆகும். 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இதன் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெயர் FlexPai.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்