இன்ஸ்டாகிராமில் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடுகள் உள்ளன, இதில் நீங்கள் புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து பகிரங்கமாக (Publicly) அல்லது தனிப்பட்ட (Privately) முறையில் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் இதில் நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களைப் பின்தொடரலாம்.

இன்ஸ்டாகிராம் அடிப்படையில் இணைய உலகில் நம் நினைவுகளை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு சாதனம்.

நாம் இக்கட்டுரையில் இன்ஸ்டாகிராம் பற்றி நம்ப முடியாத உண்மைகள் குறித்து காண்போம்.

1. இது கெவின் மற்றும் மைக் கிரியேர் மூலம் அக்டோபர் 2010 இல் iOS இயங்கு தளத்திற்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச மொபைல் செயலியாகும். தற்போது இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வழங்கப்படுகிறது.

2. ஏப்ரல் 2012 இல், பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாக்ராமை 1 பில்லியன் US டாலருக்கு வாங்கியது.

3. ஒரு மாதத்தில் 80 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பயனர்கள்களின் வயது 17 முதல் 31 வரை மட்டுமே.

4. இதில் ஒரு ஆச்சரியப்படும் செய்தி என்னவென்றால், பெண் பயனர்களின் எண்ணிக்கை, இன்ஸ்டாகிராமில் ஆண்கள் பயனர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

5. இன்ஸ்டாகிராமில் அதிக பின்பற்றுபவர்களை (Followers) கொண்ட நபர் செலினா கோம்ஸ் இவர் ஒரு பாப் பாடகி. இவரை 144m மக்கள் பின் தொடர்கிறார்கள்.

6. இன்ஸ்டாகிராமில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஈமோஜி Heart Emoji ஆகும், மேலும் மிகவும் பிரபலமான 3 ஹேஷ்டாக்குகள் #love, #instagood மற்றும் #me ஆகியவை.

கூடுதல் தகவலுக்கு:-

ஹேஷ்டாக் என்றால் என்ன தெரிந்துக்கொள்வோம்

7. இன்ஸ்டாகிராமில் அதிக பின்பற்றுபவர்களை கொண்ட பிராண்ட் National Geography (natgeo), இதனை 92m மக்கள் பின் தொடர்கிறார்கள்.

8. இன்ஸ்டாகிராமில் அதிகமான லைக்கினைப் பெற்ற புகைப்படம் Beyonce Pregnancy Photo,
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இது 11.2 மில்லியன் விருப்புகளை பெற்றுள்ளது.

9. இன்ஸ்டாகிராமில் உள்ள விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள், இதில் நீங்கள் 60 விநாடிக்கான வீடியோக்களை மட்டுமே பதிவேற்ற முடியும். மேலும் இதில் நீங்கள் இணைப்புகளை (links) பகிர்ந்து கொள்ள முடியாது.

யூடுபெப்பிற்கு போட்டியாக உள்ள இன்ஸ்டாகிராமின் ஐஜிடிவி

10. ஆய்வின்படி, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்ய சிறந்த நேரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 முதல் 6 PM மணி வரை. குறிப்பிட்டுள்ளபடி, இந்த நேர இடைவெளியில் இடுகையிடும் உங்கள் புகைப்படங்கள் எளிதாக அதிக நபர்களால் பார்க்கப்படும்.

மேலும் இக்கட்டுரைக் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுக்கு பரிந்துரைக்கவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்