பல சிறந்த கோப்பு மீட்பு பயன்பாடுகள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன, அவற்றில் சிறந்த மூன்றினைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

நீங்கள் நீக்கிய கோப்புகள் (Files) உங்கள் ஹார்ட் டிரைவில் இன்னமும் இருக்கும், இவற்றை இலவச தரவு மீட்பு மென்பொருளைப் பயன்படுத்தி மீட்டெடுக்க முடியும்.

1. Recuva

ரெகுவா மிகவும் சிறந்த தரவு மீட்பு மென்பொருள் கருவியாகும், இது ஹார்டு டிரைவ்கள், DVD/CD டிஸ்க்குகள், மெமரி கார்டுகள் மற்றும் iPod லிருந்தும் தகவல்களை மீட்டெடுக்க உதவுகிறது.

2. Disk Drill

Disk Drill ஒரு சிறந்த இலவச தரவு மீட்பு மென்பொருளாகும், ஏனெனில் அதன் அம்சங்கள் மட்டுமல்லாமல், அதன் மிகவும் எளிமையான வடிவமைப்பு ஒரு காரணமாக உள்ளது.

இதன் விரைவான ஸ்கேன் அம்சம் தகவல்களை விரைவாக பெற உதவுகிறது. தேதி அல்லது கோப்புகளின் அளவின் அடிப்படையில் தகவல்களை வடிகட்ட (Filter Option) முடியும்.

3. EaseUS Data Recovery Wizard

EaseUS Data Recovery Wizard மென்பொருளை பயன்படுத்தி ஒரு சில கிளிக்குகளில் கோப்புகளை மீட்டெடுக்க முடியும். ஆனால் இது மொத்தம் 500 MB தரவினை மட்டுமே மீட்டெடுக்க உதவுகிறது.

இம்மூன்று மென்பொருளையும் Windows 10, 8, 7, Vista மற்றும் XP இயங்கு தளங்களில் பயன்படுத்த முடியும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்