ரிமோட் டெஸ்க்டாப் மென்பொருள் துறையில் மிகப்பெரிய இடத்தைப் பெற்றுள்ளது TeamViewer, காரணம் அதன் விரிவான அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் இதனை முன்னிலைப் படுத்துகிறது.

ஏன் TeamViewer க்கு மாற்று தேவை

புதியவர்களுக்கு இந்த TeamViewer மென்பொருளானது, பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்கு நிறைய வழிவகுக்கிறது மேலும் இதனை பயன்படுத்துவது முதலில் சற்று சிக்கலான காரியம். ஒருவேளை நாம் இந்த மென்பொருளை ஒழுங்காக configure செய்யவில்லை என்றால், பயனரின் கணினி தனியுரிமை அபாயங்களால் (privacy risks) எளிதில் பாதிக்கப்படும். இதற்காகவே TeamViewer மாற்றாக பல ரிமோட் டெஸ்க்டாப் மென்பொருள் உள்ளன, அவ்வற்றை பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

1. AnyDesk

TeamViewer மென்பொருளுக்கு மாற்று பற்றி பேச தொடங்குகையில், மனதில் வரும் முதல் மென்பொருள் AnyDesk ஆகும். இதுவும் TeamViewer போன்றது தான். இதில் ஏராளமான அம்சங்கள் உள்ளன. நீங்கள் விரும்பினால் எங்கு வேண்டுமானாலும், எங்கு இருந்தும் உங்கள் சாதனங்களை நீங்கள் ரிமோட் எடுத்து பயன்படுத்த முடியும். மேலும் இதன் சிறப்பு அம்சம் மிக விரைவாக செயல்படும் தன்மை.

AnyDesk மென்பொருளின் மற்றொரு பெரிய அம்சம் இது விண்டோஸ், லினக்ஸ், MacOS, iOS, ராஸ்பெர்ரி பை மற்றும் அண்ட்ராய்டு உட்பட கிட்டத்தட்ட அனைத்து முக்கிய தளங்களையும் ஆதரிக்கிறது. நம்முடைய தனி தேவைகளுக்காக இதனை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும், பிசினெஸ் தேவைகளுக்காக என்றால் இதன் விலை $ 79 / வருடத்திற்கு.

இதனை டவுன்லோட் செய்வதற்கான அதிகாரப்பூர்வமான தளம் AnyDesk

2. Splashtop

Splashtop அனைத்து தேவைகளுக்கான ஒரு முழுமையான தீர்வாக உள்ளது. இதன் மூலம் தனிநபர்களுக்கும், குழுக்களுக்கும் எந்த ஒரு நேரத்திலும் எந்தவொரு இடத்தில் இருந்தும் கணினிகளை எளிதில் அணுக முடியும். Splashtop பாதுகாப்பு குறித்து நிறைய கவனம் செலுத்துகிறது, மேலும் உங்களின் இணைப்பு எப்பொழுதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. இதில் Two-step verification அம்சமும் உள்ளது.

இதன் மற்றோரு சிறந்த அம்சம் வாடிக்கையாளர்கள் எந்த மென்பொருளையும் தங்களின் சாதனங்களில் நிறுவ வேண்டிய அவசியமில்லை. ஒரு எளிய 9 இலக்க குறியீடு உதவியுடன் வாடிக்கையாளர்களின் கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களை இணைக்க இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இதனை உங்களின் லோக்கல் ஏரிய நெட்ஒர்க்கில் (local area network) இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். உலகில் எங்கிருந்தும் தங்கள் சாதனங்களை அணுக விரும்புவோருக்கு, $ 16.99 / வருடத்திற்கு மிகவும் நியாயமான விலையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவும் விண்டோஸ், MacOS, அண்ட்ராய்டு, iOS மற்றும் லினக்ஸ் போன்ற முக்கிய இயங்கு தளங்களை ஆதரிக்கிறது.

இதனை டவுன்லோட் செய்வதற்கான அதிகாரப்பூர்வமான தளம் Splashtop.

3. LogMeIn

மற்றொரு பிரபலமான TeamViewer க்கு மாற்று LogMeIn ஆகும், இது பயனர்கள் தங்கள் சாதனங்களை எந்த சாதனத்திலிருந்தும் அணுக அனுமதி அளிப்பதோடு மட்டுமில்லாமல், ஒரே கிளிக்கில் பைல்களை சேமிக்க(store) மற்றும் ஷேர்(share) செய்ய ஒத்துழைக்கிறது.

இதன் சிறப்பு அம்சம் விரைவாகவும், பாதுகாப்பாகவும் யாருடனும் பைல்களை பகிர்ந்து கொள்ள 1TB இலவச cloud storage னை வழங்குகிறது, இதன் விலை $30 / மாதத்திற்கு. இதனை விண்டோஸ், MacOS, அண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதனை டவுன்லோட் செய்வதற்கான அதிகாரப்பூர்வமான தளம் LogMeIn.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்