வேகமான இணைய இணைப்புகள், ஆன்லைன் வீடியோ பகிர்வு தளங்களின் வெற்றியை உறுதிச் செய்கின்றன, குறிப்பாக இன்றைக்கு பெரும்பாலான தகவல்கள் அனைத்தும் வீடியோ வடிவில் எளிமையாக ஆன்லைனில் உள்ளன. இவற்றையே அனைவரும் பயன்படுத்துகின்றனர். இனிமேல் இவ்வற்றின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கக்கூடும்.

எனவே, நாங்கள் அவற்றில் சிறந்த படைப்பாளிகளையும், பயனர்களையும் கொண்ட சில வீடியோ பகிர்வு தளங்களை பட்டியலிட்டுள்ளோம். மேலும் இந்த பட்டியலில் மிகவும் பிரபலமான நேரடி ஸ்ட்ரீமிங் சேவைகளும் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

1. YouTube

யூடியூப், கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது. இதில் பிரபலமான அனைத்து வீடியோ format களையும் கொண்ட வீடியோக்களை பதிவேற்ற முடியும், மேலும் இதில் 8K மற்றும் HDR உள்ளடக்கத்திற்கான ஆதரவும் உள்ளது. இதன் மூலம் யூடியூபில் பணம் சம்பாதிப்பதற்கு படைப்பாளர்களுக்கு பல வாய்ப்புகளை உண்டாக்கி கொடுக்கிறது யூடியூப்.

மேலும் இதில் உள்ள pre-roll மற்றும் mid-roll விளம்பரங்கள் மூலமும் சம்பாதிக்க முடியும், இவை அனைத்தும் AdSense மூலம் எளிதாக்கப்படுகிறது. இதற்கு படைப்பாளர்களுக்கு குறைந்தபட்சம் 1,000 சந்தாதாரர்கள் இருக்க வேண்டும், ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 4,000 மணிநேர பார்வையாளர்களைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், குறைந்த பட்சம் 10,000 சந்தாதாரர்களை கொண்ட சேனல்கள் விற்பனை நிலையத்தின் மூலம் தங்கள் வியாபாரத்தை விற்கலாம், கூடுதல் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும் Merchandise shelf.

இறுதியாக யூடியூபின், ‘YouTube creators program’ பல்வேறு யூடியூப் படைப்பாளிகளை ஆதரிக்கிறது. மேலும் இது ‘YouTube Space’ ஸ்டூடியோக்கள் மூலம் உள்கட்டமைப்புகளுக்கு ஆதரவு வழங்குகிறது. குறிப்பாக YouTube FanFest மற்றும் YouTube Rewind போன்ற நடவடிக்கைகள் மூலம் சிறந்த யூடியூப் பிரபலங்களை அங்கீகரிக்கிறது. இதில் Google Adsense மூலம் விளம்பரங்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன, இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் உருவாக்கிய படைப்பாளர்களுக்கு 55% கிடைக்கும்.

இதன் அதிகாரப்பூர்வ தளம் YouTube

2. Vimeo

இணையத்தில் சிறந்த வீடியோ பகிர்தல் வலைத்தளமாக யூடியூப் இருக்கும்போது, இதற்கு மாற்றாக உள்ளது Vimeo. யூடியூப் விளம்பரங்களை முற்றிலும் அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது, Vimeo பார்வையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குகிறது. ஏனென்றால் எந்த விளம்பரங்களும் விமியோவில் இடம்பெறவில்லை.

இதுவும் HD வீடியோக்களைப் பதிவேற்ற அனுமதிக்கிறது மற்றும் இதன் அடிப்படை இலவச திட்டத்தின் (Basic Free plans) மூலம் அதிகபட்ச பதிவேற்ற வரம்பு 500 MB / வாரம் ஆகும். மேலும் விமியோ பதிவேற்றாளர்கள் தங்களின் கவனத்தை ‘Video-on-demand’ இல் செலுத்தி அதன் மூலம் சம்பாதிப்பதிக்கின்றனர். Basic Free users களுக்கு இந்த வசதி இல்லை, Vimeo Pro பயனாளிகள் மட்டுமே இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். Vimeo Pro பயனாளிகளுக்கு 20GB ($240/ஆண்டு) ஆகும்.

மேலும் இதன் குறிப்பிட்டத்தக்க அம்சம், விமியோ அதன் பிரீமியம் படைப்பாளர்களுக்கு வருவாயில் 90% வழங்குகிறது என்பது ஆச்சரியம் அளிக்கிறது.

இதன் அதிகாரப்பூர்வ தளம் Vimeo

3. Facebook Watch

பேஸ்புக், மிகப்பெரிய சமூக மீடியா தளம் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. இது தற்போது யூடியூபுடன் போட்டி இடுவதற்கு Facebook Watch என்ற சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் பயனர்களின் வீடியோக்கள், பிராண்ட் பக்கங்கள் (Brand pages) மற்றும் படைப்பாளர்களால் (Creators) உருவாக்கப்பட்ட வீடியோக்கள் என மிகவும் வேறுபட்ட பட்டியல்களைக் கொண்டுள்ளது.

இதில் படைப்பாளிகளுக்கு என Facebook Creator Studio என்ற பிரத்யேக தளம் உள்ளது. இதில் வீடியோக்களை அப்லோட் செய்து கொள்ள முடியும் மற்றும் இதிலும் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் வழிகளும் உள்ளன. பேஸ்புக்கின் இந்த சேவை தற்போது ஐம்பத்திற்கும் அதிகமான நாடுகளில் உள்ளது.

கூடுதல் தகவல்:- உங்களுக்கு தெரியுமா பேஸ்புக்கின் வாட்ச் பார்ட்டி

இதிலும் படைப்பாளிகள், தங்கள் வீடியோக்களைப் பணமாக மற்ற குறைந்த பட்சம் 10,000 பின்தொடர்பவர்களை கொண்டு இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 30,000 total views. பேஸ்புக்கும், யூடியூப் போன்றே வருவாயில் உருவாக்கிய படைப்பாளிக்கு 55 சதவீதத்தை கொடுக்கிறது. மேலும் நீங்கள் உங்களுக்கு சொந்தமான செயலி (App) வைத்திருந்தால் அதில் பேஸ்புக் விளம்பரங்களைக் காட்டுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். இதற்கு உதவி புரிகிறது Facebook’s video API.

இதன் அதிகாரப்பூர்வ தளம் Facebook Watch

இவ்வறை தவிர DailyMotion, Twitch, IGTVLBRY மற்றும் பல வீடியோ தளங்கள் உள்ளன. இவை படைப்பாளிகளுக்கு அதிக சுதந்திரத்தை வழங்குகின்றன.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்