கேம்கள் சில நேரம் ஓய்வெடுக்க உதவுகின்றன அதேசமயம் நமது நேரத்தை வீணடிப்பதற்கான ஒரு அற்புதமான வழியாகவும் உள்ளன. ஆனால் நாம் தற்போது பார்க்க இருக்கும் கேம்களுக்கு தனியாக கேமிங் உபகரணங்கள் தேவையில்லை மேலும் இதற்காக நீங்கள் செயலிகளை கூட இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை, இவ்வற்றை நீங்கள் உங்கள் பிரௌசரிலேயே விளையாடலாம். அவ்வற்றில் சிறந்த 5 கேம்களை உங்களுக்கு நாங்கள் பட்டியலிடுகிறோம், வாருங்கள் பார்ப்போம்.

Powerline.io

நீங்கள் பழைய Snake கேம் விளையாடியிருக்கிறீர்களா அப்படி என்றால் இது உங்களுக்கான கேம். இதில் நீங்கள் பாம்பின் நீளத்தை அதிகரிக்க பாயிண்ட்களை சேகரிக்க வேண்டும். இதற்கு உங்களின் கீபோர்டே போதுமானது. இதில் ஒரு பாம்பு, மற்றோரு பாம்புடன் மோதாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும், விளையாட்டின் விதிமுறை அவ்வளவு தான். இந்த விளையாட்டினை உங்களின் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரௌசரில் விளையாடலாம், இரண்டிற்கும் பொருந்தக்கூடியது.

விளையாட்டிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் Powerline.io

Linerider

இயற்பியல் அடிப்படையிலான ஸிமுலேஷன் (simulation) விளையாட்டுக்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால், இது உங்களுக்கான கேம். Linerider நிச்சயமாக உங்கள் அறிவையும் மற்றும் திறமையையும் சோதிக்க கூடியது. இந்த விளையாட்டில், நீங்கள் ஒரு பையன் உட்கார்ந்து சவாரி செய்வதற்கான பாதையினை வரைய வேண்டும். நீங்கள் வரைந்து முடித்த பின், வெறுமனே உங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்க PLAY என்ற பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான். இதுவும் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரௌசருக்கு பொருந்தக்கூடியது.

விளையாட்டிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் Linerider

Sunset Bike Racer

நீங்கள் பைக் பந்தய ரசிகர் என்றால், இந்த கேம் உங்களுக்காக. இந்த சன்செட் பைக் ரேசரின் சீரற்ற நிலப்பரப்பில் பைக்கினை கட்டுப்படுத்தி பல ஸ்டண்டினை உங்களால் செய்ய முடியும். மேலும் இதில் உள்ள கட்டுப்பாடுகள் மிகவும் எளிமையானவை. வேகத்தை அதிகப்படுத்த space கீயினை கிளிக் செய்யவும், காற்றில் சுழல left/right arrow கீகளை பயன்படுத்தவும். பிரேக்கினை அழுத்த Ctrl கீயினை உபயோகிக்கவும் அவ்வளவு தான்.

விளையாட்டிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் Sunset Bike Racer

Tetris

சில விளையாட்டுகள் வெளியே போவதில்லை அவை காலத்தை தாண்டியும் நிலைக்கும் அதற்கு சிறந்த ஆதாரம் இந்த டெட்ரிஸ் கேம். இந்த பிரபலமான விளையாட்டு பல்வேறு காலங்களாக விளையாடப்பட்டு வருகின்றன. அது போன்று தான் இந்த விளையாட்டின் விதிமுறையும் மாறவில்லை. நீங்கள் கிடைமட்டமாக பெட்டிகளை அடுக்கினாலே போதுமானது. மேலும் இந்த நவீன கிளாசிக் விளையாட்டின் நியான் வண்ண தொகுதிகள் ஒரு புத்துணர்ச்சியை நமக்கு சேர்க்கின்றன.

விளையாட்டிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் Tetris

Vector Runner

நீங்கள் சிறிது நேரம் கேம் விளையாடிக் கொண்டே அமைதியாக ஓய்வெடுக்க விரும்பினால் வெக்டர் ரன்னர் இதற்கு சிறந்த ஒன்றாகும். இந்த விளையாட்டில் நீங்கள் ஓடுபாதையில் நகர்ந்து, பொருட்களை சேகரிக்க வேண்டும். தடைகளை தவிர்க்க ஒரே ஒரு Jump அவ்வளவு தான். மேலும் உங்களின் அனுபவத்தை வளப்படுத்த அற்புதமான பின்னணி பாதையும் இதில் உள்ளது.

விளையாட்டிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் Vector Runner

இத்துடன் இந்த ஐந்து விளையாட்டுடன் எங்கள் பட்டியலை முடிக்கிறோம். இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்