இந்த நாட்களில் நாம் நம்முடைய எல்லா தேவைகளுக்கும் மொபைல் போன்களை பயன்படுத்துகிறோம், குறிப்பாக நாம் நமக்கு விருப்பமான கேம்களை விளையாடுவதற்கும், உலகின் மற்றொரு பக்கத்தில் உள்ள ஒரு நபரை பார்க்க அல்லது பேச என பல்வேறு தேவைகளுக்காகவும் மொபைல் போன்களில் உள்ள செயலிகளை பயன்படுத்துகிறோம்.

அவற்றில் சில செயலிகள் நம்பமுடியாத அளவு எதிர்மறையான பிரச்சனைகளை நமக்கு உருவாக்குகின்றன. கூகுளின் Play Store ஆனது பாதுகாப்பற்ற உள்ளடக்கத்தை அல்லது செயலிகளை கொண்டுள்ளது என்று அடிக்கடி விமர்சனங்கள் வருகின்றன, நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், இச்செயலிகள் உங்களைக் கண்காணிக்கலாம் அல்லது உங்கள் தகவல்களை திருடலாம்.

இதை மனதில் கொண்டு, நாங்கள் இக்கட்டுரையில் நீங்கள் எந்த சந்தர்ப்பங்களிலும் உங்கள் மொபைலில் நிறுவப்படக்கூடாத 5 செயலிகளை குறித்து குறிப்பிட்டுள்ளோம், சரி அவற்றை குறித்து காண்போம்.

1. ES File Explorer

இது நாம் அறிந்த பெரும்பாலான ஆண்ட்ராய்டு பயனாளர்களால் பயன்படுத்தப்படும் பைள் எக்ஸ்ப்ளோரர் (File explorer app) செயலியாகும். சரி, இதனை பயன்படுத்துவதால் என்ன ஆகப் போகிறது என நீங்கள் கேட்கலாம், இதன் இலவச பதிப்பு அதிக bloatware மற்றும் ad-ware களை கொண்டுள்ளன, இதன் விளைவாக நம்முடைய அனுமதி இல்லாமல் நம்முடைய மொபைலில் எண்ணற்ற தீங்கு விளைவிக்கக்கூடிய பைள்கள் அல்லது செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படலாம்.

இதற்கு மாற்றாக இதைப் போன்ற பயன்பாடுகளுடன் கூடிய OI File Manager என்ற செயலி Play Store இல் உள்ளது, இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. UC Browser

இது சீனா மற்றும் இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு இணைய உலாவியாகும் (Web Browser). இது பயனாளிகள் UC Browser கொண்டு கூகுளில் தேடும் தகவல்களை கண்காணிக்கிறது. மேலும் இது நீங்கள் பயன்படுத்தும் மொபைலின் IMEI எண், அண்ட்ராய்டு ID, உங்களின் இருப்பிடம் மற்றும் உங்கள் மொபைலின் MAC முகவரி போன்ற தகவல்களை எந்த ஒரு என்கிரிப்ஷனும் இல்லாமல் Umeng க்கு (an Alibaba analytics tool) அனுப்புகிறது.

நீங்கள் இதற்கு பதிலாக குரோம் அல்லது பயர்பாக்ஸ் செயலிகளை பயன்படுத்தலாம், ஆனால் சிலருக்கு இதில் தங்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகம் எழலாம், அப்படியெனில் நீங்கள் Lightning என்ற இணைய உலாவியை பயன்படுத்தலாம்.

3. CLEAN it

இச்செயலியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, இதனை நாம் நம் மொபைல் போன்களில் உள்ள தேவை இல்லாத பைல்களை டெலிட் செய்வதற்கு பயன்படுத்துகிறோம், சரி, இதில் உள்ள குறை என்ன என்பதை பார்ப்போம், எடுத்துக்காட்டாக, நாம் நம்முடைய மொபைலில் உள்ள கேச் தகவல்களை கிளீயர் செய்யும் போது இது RAM மெம்மரியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களையும் கிளீயர் செய்து விடுகிறது, இதனால் நாம் பயன்படுத்தும் மொபைல் போனின் செயல்பாடு குறையலாம் மற்றும் மொபைலின் பேட்டரி அதிகமாக பயன்படுத்தப்படலாம்.

இதற்கு மாற்றாக Greenify என்ற செயலியை இலவசமாக பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. QuickPic

QuickPic என்பது புகைப்படங்களை தொகுத்து வழங்கக்கூடிய ஒரு செயலி, இதனை சுலபமாக பயன்படுத்திக் கொள்ள முடியும், ஆனால் இச்செயலியில் உள்ள குறை, இது பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை தன்னுடைய சர்வரில் சேமிக்கிறது என்பதால் இது பாதுகாப்பானது அல்ல. இதற்கு மாற்றாக Play Store எண்ணற்ற கேலரி பயன்பாடுகள் உள்ளன, அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு Piktures செயலி, இது முற்றிலும் விளம்பரம் இல்லாதது மற்றும் பாதுகாப்பானது.

5. Dolphin Web Browser

இதுவும் UC Browser போன்று நம்முடைய தகவல்களை கண்காணிக்கிறது, எல்லாவற்றுக்கும் மேலாக, இது incognito mode இல் நீங்கள் தேடும் தகவல்களை தங்களின் சர்வரில் சேமித்து வைத்து கொள்கிறது. முன்னர் குறிப்பிட்டுள்ளபடி, குரோம், பயர்பாக்ஸ் மற்றும் லைட்னிங் ஆகியவை இதற்கு சிறந்த மாற்றாக இருக்கும்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறோம், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

2 thoughts on “தெரிந்தும் தெரியாமலும் கூட இந்த அப்களை இன்ஸ்டால் செய்து விடாதீர்கள்”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்