ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் காலாண்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசை மொபைல் நிறுவனங்களின் பங்குகள் மற்றும் விற்பனையை பொறுத்து வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

முதல் இடத்தை தென்கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் பெற்றுள்ளது.

  • ஒவ்வொரு ஆண்டும் பத்து சதவீதம் விற்பனை சரிந்தாலும், உயர்தர மாடல்களில் விற்பனையினால் சாம்சங் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.

இதற்கு அடுத்ததாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் இரண்டாம்-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

  • ஹூவாய் நிறுவனம் ஆண்டுக்கு நாற்பது சதவீதம் வளர்ச்சியை பெற்று உள்ளது. இந்நிறுவனம் இவ்வாண்டில் அதிக மொபைல் போன்களை விற்று சாதனை புரிந்து உள்ளது.

மூன்றாம் இடத்திற்கு ஆப்பிள் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

  • இது இவ்வாண்டில் நாற்பது சதவீத போன்களை விற்பனை செய்து இருந்தாலும், இது ஒரு சதவீத வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளது.

நான்காவது இடத்தில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி உள்ளது,

  • இது இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் உள்ளது. இது ஹூவாய் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக உலக அளவில் அதிக மொபைல் போன்களை விற்பனை செய்து உள்ளது

ஐந்தாவது இடத்தில் மறுபடியும் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ உள்ளது,

  • கடந்த ஆண்டு இது ஐந்து சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது, இது தனது சந்தையை விரிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்