நாம் இந்த வருடத்தின் இறுதி மாதத்திற்கு வந்து விட்டோம், அனைவருக்குமே இவ்வருடத்தில் நடந்த நிகழ்வுகளை குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும், இதற்காகவே ட்விட்டர் ஒரு தொகுப்பினை வெளியிட்டுள்ளது, இதில் இந்த ஆண்டில் இந்தியாவுக்கான ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட நிகழ்வுகள் மற்றும் ட்ரெண்ட் ஆன ஹேஷ்டேக்கள் குறித்த தகவல்களை இடம் பெற்றுள்ளன, இது குறித்து இக்கட்டுரையில் சற்று விரிவாக பார்ப்போம்.

டாப் 10 ட்விட்டர் நிகழ்வுகள் எவை

இதில் இந்திய ட்விட்டர் சமூகத்தில் அதிகளவு பகிரப்பட்ட அல்லது அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. முதல் இடத்தில் சர்கார் திரைப்படம். காரணம் திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே கதைத்திருட்டு பிரச்னை மற்றும் படம் வெளியான பின் ஆளுங்கட்சி எதிர்ப்பு என ட்விட்டரில் பல விவாதங்களை உண்டாக்கியது. மேலும் இது தவிர அதிகம் பேசப்பட்ட மீடு, கேரளா வெள்ளம், ஆசிபா வழக்கு போன்ற நிகழ்வுகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

 • #Sarkar
 • #MeToo
 • #KarnatakaElection
 • #KeralaFloods
 • #Aadhaar
 • #JusticeForAsifa
 • #Deepveer
 • #IPL2018
 • #WhistlePodu
 • #AsianGames2018

அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் எது

இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, இன்டெர்கான்டினென்டல் கப் போட்டிக்கு முன்பாக, ஒரு வீடியோ பதிவினை ட்விட்டரில் ட்விட் செய்திருந்தார். இதுவே இந்தியாவில் இந்த ஆண்டில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டாக அமைந்தது. இப்போது அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும் அது என்ன வீடியோ என்று,

சுனில் சேத்ரி அந்த வீடியோ பதிவில், மக்கள் இந்திய அணியின் ஆட்டத்தை ஸ்டேடியத்தில் வந்து பார்க்குமாறு அழைப்பு விடுத்திருந்தார், இதனை பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் ரீட்வீட் செய்திருந்தனர்.

அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் எது

வடஇந்தியாவில் கர்வாசவுத் பண்டிகை மிகவும் பிரபலம், அன்று கணவரின் நல்வாழ்வுக்காக மனைவியார்கள் விரதம் இருப்பார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவியான அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து எடுத்த ஒரு போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 2018 இன் இந்த நாள் வரை இந்தியாவில் அதிகம் லைக் செய்யப்பட்ட பதிவாக இது இருக்கிறது.

2018 இன் டாப் 10 ஹேஷ்டேக்குகள் எவை

இந்த வருடம் ட்விட்டரில் இந்தியாவில் தென்னிந்தியாவை சார்ந்த திரைப்படங்களின் ஹேஷ்டேக்குகள் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகியிருந்தன. குறிப்பாக சொல்ல போனால் முதல் 10 ஹேஷ்டேக்குகளில் 6 இடங்களைத் தென்னிந்தியப் திரைப்படங்களே பிடித்தனர். மேலும் திரைப்படங்களுக்கு போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் #WhistlePodu என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் அதிக அளவு ட்ரெண்ட் ஆனது.

 • #Sarkar
 • #Viswasam
 • #BharatAneNenu
 • #AravindhaSametha
 • #Rangasthalam
 • #Kaala
 • #BiggBossTelugu2
 • #MeToo
 • #WhistlePodu
 • #IPL2018

அதிகம் பேசப்பட்ட ட்விட்டர் கணக்கு யாருடையது

அரசியல்வாதிகள் பலரும் இந்த லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளனர், குறிப்பாக அனைவரும் எதிர்பார்த்தது போலவே முதல் இரண்டு இடங்களில் நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் உள்ளனர். மேலும் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன 10 இடங்களில் தமிழகத்திலிருந்து நடிகர் விஜய் மற்றுமே இடம் பிடித்துள்ளனர்.

 •  @narendramodi
 • @RahulGandhi
 • @AmitShah
 • @myogiadityanath
 • @AravindKejriwal
 • @PawanKalyan
 • @iamsrk
 • @actorvijay
 • @urstrulyMahesh
 • @ChouhanShivraj

இது இந்த வருடத்திற்கான பட்டியல், எப்போதும் போலவே இந்த வருடமும் முடிய போகுது, அடுத்த வருடம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்