பேனா மற்றும் காகிதத்துடன் குறிப்புகளை எடுத்த காலம் கடந்து விட்டது , இது மொபைல் யுகம்,

Evernote என்பது நீங்கள் தினசரி நினைவூட்டல்களுக்கும் (To-do Lists) மற்றும் முக்கியமான விஷயங்களை சேமித்து வைத்து கொள்ளவும் உதவும் ஒரு பயன்பாடாகும்.

உங்கள் Evernote கணக்கில் நீங்கள் சேமித்து வைக்கும் அனைத்தும் தானாகவே Evernote நிறுவப்பட்டிருக்கும் உங்கள் எல்லா சாதனங்களிலும் (synced) ஒத்திசைக்கப்படும். எடுத்துக்காட்டாக உங்கள் கணினி மட்டும் மொபைல்.

இதன் சிறப்பு அம்சம் இதனை எல்லா தளங்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும் iOS உட்பட அண்ட்ராய்டு, மேக் மற்றும் விண்டோஸ்.

இணையத்துடன் நீங்கள் இணைந்திருக்கும் வரை நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எங்கு சென்றாலும் உங்கள் குறிப்புகளை தேடலாம் மற்றும் திருத்தலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்