இந்திய கிரிக்கெட்டின் ஐகானான விராத் கோஹ்லி கடந்த திங்கள்கிழமை தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் அவரது பிறந்த நாளை கோஹ்லி ரசிகர்கள் கொண்டாடும் விதமாக கோஹ்லியின் முதல் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்கு தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இச்செயலி மூலம் கோஹ்லி ரசிகர்கள் அவரது சமீபத்திய செய்திகளையும், அப்டேட்களையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இது கிரிக்கெட் ஆர்வலர்களை நேரடியாக தொடர்பு கொள்ள வழிவகுக்கும் ஒரு தளமாகவும் உள்ளது. மேலும் விராத் கோஹ்லியின் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் ரசிகர்கள் அவருடன் சமூக ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதுடன் அவரது பதிவுகளை எளிதாக காண முடியும்.

விராட் கோஹ்லியின் அதிகாரப்பூர்வ செயலியில், இதுவரை கோஹ்லி விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை, மேலும் அவர் ஒவ்வொரு போட்டிகளிலும் எடுத்த ரன்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த தகவல்கள் உங்களுக்கு முக்கியம் இல்லை என்றால், செயலியில் ஒரு பிரத்யேக வினாடி வினா பிரிவு உள்ளது, அங்கு கோஹ்லியின் வாழ்க்கை தொடர்பான கேள்விகள் இடம் பெற்றுள்ளன, நீங்கள் இங்கு பதில் அளிக்கலாம், உங்களின் சரியான பதில்களை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் புள்ளிகளைப் பெறுவீர்கள். இதனை விராட் கோஹ்லியின் விற்பனை தளத்தில் பொருள்களை வாங்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காகவே இந்த செயலில் ஒரு பிரத்யேக அங்காடி உள்ளது, அதில் நீங்கள் பொருட்களை வாங்கலாம்.

மேலும் இச்செயலியில் ஜர்னி (Journey) எனும் ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது, இதனை கிளிக் செய்தால் விராட் கோஹ்லியின் சாதனைகளை காண முடியும். இது கோஹ்லியின் முக்கிய மைல்கற்களை எடுத்து காட்டுகிறது. இதில் பல்வேறு சர்வதேச அணிகளுக்கு எதிராக அவர் விளையாடிய போட்டிகளையும் அவரது எண்களையும் ஒப்பிடலாம். மேலும், இந்த பயன்பாடு, கோஹ்லி வழங்கும் உடற்பயிற்சி சார்ந்த சவால்களை (Fitness focused challenges) எடுக்க உதவுகிறது.

விராட் கோஹ்லியின் சமீபத்திய செய்திகளைப் பெறுவது மட்டுமில்லாமல் அவரது தனிப்பட்ட வால்பேப்பர்களையும், வீடியோக்களையும், படங்களையும் பதிவிறக்க நீங்கள் இந்த அதிகாரப்பூர்வ பயன்பாட்டை பயன்படுத்தலாம். கூடுதலாக, கோஹ்லியுடன் எளிதாக தொடர்பு கொள்ளவதற்கு இந்த பயன்பாடு வழிவகுக்கிறது.

கோஹ்லியின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பயன்படுத்துவதற்கு உங்களிடம் குறைந்தது Android 5.0 லாலிபாப் அல்லது iOS 10 இயங்கு தளம் கொண்ட மொபைல் சாதனம் இருக்க வேண்டும். இப்பயன்பாட்டை கூகுள் பிளே மற்றும் ஆப் ஸ்டோர் வழியாக இலவசமாக பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்புவதன் மூலம் அல்லது உங்கள் பேஸ்புக்/கூகிள் கணக்கை இணைப்பதன் மூலம் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இச்செயலி Cornerstone Sport and Entertainment என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.

குறிப்பாக, கோஹ்லி ஸ்மார்ட்போன் உலகிற்கு வருவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே டெல்லியை சார்ந்த Moon Labs என்ற நிறுவனம் Virat Super Cricket என்ற கேமை 2016 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதேபோல், Moto G Turbo மொபைல் போனில் Virat Kohli Edition பதிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டது, மேலும் கடந்த ஆண்டு கோஹ்லியின் ரசிகர்களை குறிவைக்கும் விதமாக Gionee A1 Virat Kohli Signature Edition அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான மொபைல் செயலியை பதிவிறக்க Virat Kohli Official App-Apps on Google Play

iOS இயங்குதளத்திற்கான மொபைல் செயலியை பதிவிறக்க Virat Kohli Official App-App Store

மேலும் இக்கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுக்கு பரிந்துரைக்கவும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்