இந்திய ரிசர்வ் வங்கி,  டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு என ஒரு விதியை அமுல்படுத்தியுள்ளது,

அதாவது இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனை சார்ந்த தகவல்கள் அனைத்தும் இந்தியாவிலேயே சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பதாகும். அப்போதுதான் பரிவர்த்தனை சார்ந்த தகவல்கள் சோதித்து அறிந்து தகவல்களை பாதுகாக்க முடியும்.

இதற்கு விசா, மாஸ்டர் கார்ட் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஏனேனில் பரிவர்த்தனை சார்ந்த தகவல்களை இந்தியாவில் சேமிப்பதற்கு பல மில்லியன் டாலர்கள் செலவாகும் என்பதால்.

ஆனால் Paytm என்ற டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனம் இதற்கு ஆதரவு அளித்துள்ளது.

இதனால் Paytm மற்றும் அமெரிக்க டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது, இவை ஒரு புறம் இருந்தாலும் இந்தியாவில்  டிஜிட்டல் வர்த்தகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்திய டிஜிட்டல் வர்த்தகத்தின் வளர்ச்சியை பார்த்து வாட்ஸ்அப் மற்றும் அமேசான் நிறுவனங்கள் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்