இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஐடியா மற்றும்  வோடாபோன் நிறுவனங்கள் ஜூன் மாதமே இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதுதான் இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சகம் அதற்கு அனுமதி அளித்துள்ளது.

பிர்லா குழுமத்தின் ஐடியா நிறுவனத்தையும், இங்கிலாந்தைச் சேர்ந்த வோடபோன் தொலைத் தொடர்பு நிறுவனத்தையும் ஒன்றிணைக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீண்ட நாட்களுக்கு பிறகு சில நிபந்தனைகளுடன் இதற்கான அனுமதியை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வழங்கியுள்ளது.

வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணையும் தருவாயில் ‘வோடாபோன் ஐடியா’ என்று பெயர் மாற்றம் பெறும் என கூறப்படுகிறது.

இவ்விரு நிறுவனங்கள்  இணைந்தாலும் ரிலையன்ஸ் ஜியோவின் தாக்கத்தினைச் சமாளிக்க முடியாது  என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்