ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேக் எப்படி ட்ரெண்ட் ஆகிறது என்பதை குறித்துக் காண்போம்.

ட்விட்டர் 2006 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட சமூக வலைத்தளமாகும்.

இது ட்விட்டர் ட்ரெண்டிங் என்ற சேவையை 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில், உலக அளவில் அதிகம் பேசப்படும் அல்லது பகிரப்படும் செய்திகளின் அடிப்படையில் அதில் பயன்படுத்தப்படும் தலைப்பு ட்ரெண்டிங் பட்டியலில் நுழைகிறது.

ஆரோக்கியமான உரையாடலை ஊக்குவிப்பதற்கெ ட்ரெண்டிங் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் அவதூறு பரப்பக்கூடிய தலைப்புகள், இனம், தேசம், மதச்சார்பு போன்ற
தலைப்புகளில் கருத்துக்களை பதிவிட்டால் அவை ட்ரெண்ட்டில் சேர்க்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்