5G குறித்து தெரிந்துகொள்வதற்கு முன்னர் நடைமுறையில் உள்ள 2ஜி ,3ஜி மற்றும் 4ஜி பற்றி மேலாட்டமாக தெரிந்துகொள்வோம்.

ஒன்றாம் தலைமுறை சேவை அதாவது 1G 1980 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது, இது அனலாக் முறையை சார்ந்த தொலை தொடர்பு சேவையாகும், இந்த சேவையில் அழைப்புகளை  மட்டுமே பயன்படுத்திக்கொள்ளமுடியும் .

இரண்டாம் தலைமுறை சேவை அதாவது 2G 1991 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது, இது டிஜிட்டல் முறையை சார்ந்த தொலை தொடர்பு சேவையாகும். இந்த சேவையில் அழைப்புகள் மற்றும் டேட்டா ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளமுடியும் ..

2ஜி சேவையில் மேம்பட்ட பிரிவாக அறிமுகம் செய்யப்பட்டதே 2.5ஜி  (GPRS -G) மற்றும் 2.75ஜி (EDGE-E) சேவைகள் ஆகும்.

மூன்றாம் தலைமுறை சேவை அதாவது 3G 1998 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது, இது சர்வதேச அளவில் அதிக பயன்பாட்டில் உள்ளது, இந்த சேவையில் அழைப்புகள், உயர் வேக வாய்ஸ் டேட்டா, வீடியோ கால் மற்றும் இணையம் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

நான்காம் தலைமுறை சேவை அதாவது 4G 2008 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது, இச்சேவை பரவலாக பல்வேறு நாடுகளில் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றது, இந்த சேவை இணையம் சார்ந்த பயன்பாட்டிற்கு ஏற்ற வாகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் தலைமுறை சேவை அதாவது 5G 2018 ஆம் ஆண்டில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது, 2020 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த சேவை உயர் தர ஹெச்டி இணைய சேவை சார்ந்த பயன்பாட்டிற்கு ஏற்ற வாகையில் உருவாக்கப்பட உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்