இந்த நூற்றாண்டின் மிக பெரிய கண்டுப்பிடிப்பு இணையம், இணையத்தில் இல்லாத தகவல்களே இல்லை என்று கூறலாம்.

இன்று நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களான Facebook, WhatsApp மற்றும் Instagram ஆகியவை ஒரு ஒற்றுமையை கொண்டுள்ளன. அவை நாம் சாட்டிங்-இன் போது பயன்படுத்தும் இமோஜி-க்கள், நாம் சாட்டிங்-இன் போது தகவல்களை பகிர்வதை காட்டிலும் இமோஜி-களை அதிகமாக பயன்படுத்துக்கிறோம்.

இவை நமது உணர்வுகளை மற்றவர்களுக்கு எளிமையாக புரிய வைப்பதற்கு உதவுகிறது.

இன்றைய உலகில் நம்முடைய சிரிப்பு, துக்கம் போன்ற உணர்வுகளை சத்தமில்லாமல் இமோஜி-கள் விழுங் கிவிட்டன.

ஒரு செய்தியின் முடிவில் நாம் சேர்க்கும் ஒரு இமோஜி அந்தச் செய்தியின் பொருளையும் அதற்கு நாம் அளிக்க இருக்கும் விளக்கத்தையும் நிர்ணயிக்கும் திறனை பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் மக்கள் LOL “Laugh out loud” போன்ற வார்த்தைகளை சுருக்கி பயன்படுத்தினர், பின்னாளில் இவை மேலும் சுருக்கப்பட்டு இமோஜி-களாக மாற்றம் பெற்றது.

ஜப்பானிய மொழியில், இமோஜி-யில் “இ” என்பது வரைபடத்தையும், “மோஜி” என்பது கேரக்டரையும் குறிக்கிறது.

இமோஜி-களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தபட்டது சிரித்து சிரித்து ஆனந்த கண்ணீர் வருவதை போல உள்ள இமோஜி-யாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்