ஆக்மண்டட் ரியாலிட்டி Augmented Reality (AR) என்பது வளர்ந்து வரும் கணினி தொடர்புடைய தொழில்நுட்பம் ஆகும்.

வெர்ட்டியுவல் ரியாலிட்டி (virtual reality) யின் அடுத்த கட்டம் தான் இந்த ஆக்மண்டட் ரியாலிட்டி.

வெர்ட்டியுவல் ரியாலிட்டி என்பது உங்களுக்கு ரியல் உலகத்தை கொடுக்கும் என்றால் ஆக்மண்டட் ரியாலிட்டி உங்களுக்கு ரியலையும், கற்னையையும் சேர்த்து கொடுக்கும்

ஆக்மண்டட் ரியாலிட்டி என்பது உங்களை சுற்றியுள்ள உலகை உங்களுக்கு டெக்னாலஜியின்  கண்கள் மூலம் வீடியோ, ஒலி மற்றும் கிராபிக் போன்றவற்றின் உதவியால் தெரிய வைக்கும் ஒரு உயர்ந்த டெக்னாலஜி.

மேலும் இது மென்பொருளை அடிப்படையாக கொண்டது, இயற்கையான ஒரு பொருளை உங்கள் கற்பனைக் கண்களின் உதவியால் அடுக்கடுக்காக காண வைப்பதுதான் இதன் சிறப்பம்சம்.

இந்த மென்பொருளில் கேமிரா, காம்பாஸ்  மற்றும் ஜிபிஎஸ் போன்ற எலக்ட்ரானிக் உபகரணங்களும் இணைக்கப்படும்.

உலகில்  பலரை கவர்ந்த போகிமான் கோ (Pokemon Go) விளையாட்டு இந்த ஆக்மண்டட் ரியாலிட்டி டெக்னாலஜியை அடிப்படையாகக்  கொண்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்