Bitcoin என்பது ஒரு cryptocurrency, இதில் பணம் டிஜிட்டல் முறையில் உள்ளது, இதற்கென சிறப்பு வங்கி அல்லது நிர்வாகம் கிடையாது.

இதில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இரகசியக் குறியீட்டு முறையைப் பயன்படுத்திச் செய்யப்பட்டுள்ளன. மோசடிகளைத் தவிர்க்க ஒரு பிட்காயினை அதன் உரிமையாளர் ஒரு முறை மட்டுமே செலவழிக்க முடியும். ஒரே பிட்காயினை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.

நம்முடைய அடையாளத்தை மறைத்து கூட பிட்காயினைப் பயன்படுத்த முடியும், பிட்காயின் முகவரி உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இணையம் மூலம் பணத்தை அனுப்பலாம், இது peer-to-peer என்ற தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது, எந்த அரசாங்கமும் பிட்காயினின் மதிப்பை மாற்ற முடியாது.

தற்போதைய நிலவரப்படி

1 Bitcoin equals to 5,54,607.20 Indian Rupee

1 Bitcoin equals to 7,987.24 United States Dollar

பிட்காயினின் இரகசியக் குறியீடு வாங்குவோரையும் மற்றும் விற்பனையாளரையும் இணைக்கிறது.

ஒரு Bitcoin-ன் மதிப்பு மக்கள் அதற்கு எவ்வளவு செலுத்துகிறார்கள் என்பதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. இது பங்குகள் விலையினை (Stock Exchange) ஒத்திருக்கிறது.

சாத்தொஷி நாகமோட்டோ (Satoshi Nakamoto) என்ற பெயரைப் பயன்படுத்தி அறியப்படாத நபர் அல்லது ஒரு குழுவினரால் 2009-ம் ஆண்டு Bitcoin கண்டுபிடிக்கப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்