எப்போதாவது ஒரு வலைத்தளத்திலோ அல்லது ஒரு வலைப்பதிவிலோ உங்கள் தகவல்களை நீங்கள் தரும் போது அதில் பெரிய அளவிளான எழுத்துக்கள் நெளிந்தும், குழிந்தும், மங்கியதாகவோ அல்லது அதன்மீது கிறுக்கியுமோ இருக்கக் காண்பீர்கள்.

இந்த குறியீடுகள் CAPTCHA எனப்படும், இது Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்ற வார்த்தையின் சுருக்கமாகும்.

வலைத்தளங்கள் CAPTCHA குறியீட்டை அவற்றின் பதிவு செயல்முறைகளில் ஏன் செயல்படுத்த வேண்டும் என்பதற்கு காரணத்தை காண்போம்.

வலைத்தளத்தில் பதிவுகளை இடுவோர் உண்மையான மனிதர்களா அல்லது கணினி நிரல்களா (Computer program) என்பதை கண்டறிய இக்குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு தளம் அல்லது வலைப்பதிவின் உரிமையாளர், தங்களின் தளத்தில் CAPTCHA போன்ற சில வகையான பாதுகாப்பைப் பயன்படுத்தவில்லை என்றால், அவர்கள் ஒரே நாளில் டஜன் கணக்கான ஸ்பேம் பதிவுகளை பெறுவார்கள்.

CAPTCHA களின் சில வகைகள்

Math CAPTCHAs- இரண்டு எண்களை சேர்ப்பது அல்லது கழித்தல் போன்ற அடிப்படை கணித சிக்கலை இது தருகிறது.

3D Super CAPTCHAs- 3D இல் காண்பிக்கப்பட்ட ஒரு படத்தை அடையாளம் காண இது பயன்படுத்தப்படுகிறது.

I am not a robot CAPTCHA- இதில் பயனர்கள் இமேஜ்களை சரிபார்க்க வேண்டும்.

குறிப்பு:- தமிழில் இதுவரை காப்ட்சா உள்ளீடும் முறை இன்னும் உருவாக்கப்படவில்லை.

2 thoughts on “காப்ட்சா பற்றி உங்களுக்கு தெரியுமா”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்