கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) என்பது கூகுள் அறிமுகப்படுத்திய virtual அசிஸ்டன்ட் ஆகும். இது Google Now என அழைக்கப்பட்ட Android அம்சத்தின் பரிமாணமாகும்.

கூகுள் அஸ்சிஸ்டன்டை மொபைல் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களில் பயன்படுத்த முடியும். இது 2016-ம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்டது.

பயனர்கள் கூகிள் உதவியாளருடன் (Google Assistant) குரல் அல்லது கீபோர்டு மூலம் தொடர்பு கொள்ள முடியும், இது நமக்கு வேண்டிய தகவல்களை கூகுள் உதவியுடன் நமக்கு பெற்று தரும்.

இதன் மூலம் பயனர் சாதனத்தில் உள்ள வன்பொருள் அமைப்புகளை (Hardware settings) சரிசெய்ய முடியும். இண்டர்நெட்டில் தகவல்களை பெற முடியும், நிகழ்வுகள் (Events) மற்றும் அலாரங்களை (Alarms) அமைத்திட முடியும். மேலும் பல வசதிகள் இதில் உள்ளது.

கூகுள் அசிஸ்டன்டில் நாம் பயன்படுத்துவதற்கான சில கட்டளைகள் உதாரணமாக

“Good morning”
“Wake me up at 06:30am”
“Open camera”
“Set a reminder for …”
“Set a timer for …”
“Turn on Bluetooth”
“Play classical music”
“Show my pictures “

இது மற்ற virtual அசிஸ்டன்களான ஆப்பிளின் ஸ்ரீ (Siri), அமேசானின் அலெக்சா (Alexa) மற்றும் மைக்ரோசாப்டின் கார்டனவுடன் (Cortana) போட்டியிடுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்