நாம் தினசரி பயன்படுத்தும் கூகிளின் முகப்புப்பக்கத்தில் காணும் வரைப்படங்களை பற்றி காண்போம்.

இவை கூகுளின் கேலிச்சித்திரங்கள் (Google Doodle) என்று அழைக்கப்படுகின்றன.

இவ்வற்றை விடுமுறை நாட்கள், முக்கிய நிகழ்வுகள், சாதனைகள் மற்றும் மக்களை சிறப்பிக்க கூகுளின் முகப்புப் பக்கத்தில் தற்காலிகமாக வெளியிடப்பபடுகின்றன.

கூகுளின் முதல் கேலிச்சித்திரம் 1998ல், பர்னிங் மேன் விழாவை (Burning man festival) சிறப்பிக்கும் விதமாக அமைந்தது.

கேலிச்சித்திரங்களை ஏற்பாடு செய்து வெளியிட டூடுலேர்ஸ் (Doodlers) எனும் ஊழியர்கள் குழு ஒன்று கூகிளில் செயல்படுகிறது.

மேலும் பல்வேறு நாடுகளில் கூகிள் நடத்தும் போட்டிகளில் குழந்தைகளால் உருவாக்கப்பட்ட/வரையப்பட்ட படங்கள் அந்நாட்டு கூகிளின் முகப்புப்பக்கத்தில் டூடுலாக இடம்பெறும்.

முதன் முதலில் 2009 ஆம் ஆண்டு கூகிள் நிறுவனத்தால் Doodle 4 Google போட்டி இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கான தலைப்பாக ‘My India’ என்று வழங்கப்பட்டது, இதில் குர்கானை சேர்ந்த Puru Pratap Singh என்ற நான்காம் வகுப்பு மாணவனால் வரையப்பட்ட Doodle தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும் இது 2009 ஆம் ஆண்டு குழந்தைகள் தினம் அன்று இந்திய கூகிளின் முகப்புப்பக்கத்தில் வெளியிடப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்