லிங்டின் (Linkedin) என்பது வணிக ரீதியான சமூக வலைத்தளமாகும், இது மே 2003-ம் ஆண்டு அறிமுகம் படுத்தப்பட்டது.

இதில் தற்போது 300 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர்.

இத்தளத்தின் மூலம் வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் நபர்கள், தொழிலதிபர்கள், சிறுதொழில் உற்பத்தியாளர்கள் அனைவரும் தொழில் ரீதியாக இணைக்கப்பட்டு தங்கள் விபரங்களை பகிர்ந்துக் கொள்கின்றனர்.

இத்தளத்தின் மூலம் தகவல் பரிமாற்றங்கள், புதிய தொழில் வாய்ப்புகள் போன்றவை எளிதாக கையாளப்படுகின்றன.

லிங்டினில் உறுப்பினர்கள் தங்களது விபரங்களை பதிவு செய்து கொண்டு மிகவும் எளிதாக தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இத்தளம் ஆங்கிலம், பிரான்சிய மொழி, இத்தாலிய மொழி உட்பட 20 மொழிகளில் உள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்