Shazam என்ற செயலி ஷசாம் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

இசையை கண்டறிவதில் சிறப்பான சேவையை வழங்குவதில் ஷசாம் செயலி முக்கிய அங்கம் வகிக்கிறது.

இச்செயலி வானொலி, தொலைக்காட்சி அல்லது பிற இடங்களில் ஒளிப்பரப்பப்படும் பாடல்கள் குறித்த தகவல்களை கண்டுபிடிக்க உதவுகிறது.

ஷசாம் செயலியை போனில் இன்ஸ்டால் செய்து அதனை பாடல் ஒளிப்பரப்பப்படும் ஸ்பீக்கர்களின் அருகே கொண்டு செல்ல வேண்டும்,

இதன் மூலம் இசையின் ஆல்பம், கலைஞர்கள் மற்றும் பாடலின் வரிகள் ஆகியவற்றை அடையாளம் காண முடியும்.

ஷசாம் செயலி தற்போது ஐபோன், அண்ட்ராய்டு மற்றும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது..

2017 ஆம் ஆண்டு ஷசாம் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தால் வாங்கப்பட்டது.

2 thoughts on “இசையை கண்டறிய ஆப்பிள் நிறுவனத்தின் செயலி”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்