Spotify என்பது ஆன்லைன் வழியாக பாடல்களை கேட்க உதவும் ஒரு இணையத்தள சேவையாகும், இது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதில் இலவசமாக சில வரையறுக்கப்பட்ட சேவைகளையும், கட்டணம் செலுத்தி இன்னும் சில சேவைகளையும் பெற முடியும் அவை மேம்படுத்தப்பட்ட ஸ்ட்ரீமிங் மற்றும் பாடல்களை டவுன்லோட் செய்யும் வசதி.

மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி Login செய்வதன் மூலம் Spotify சேவையை எளிதாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

35 மில்லியனுக்கும் அதிகமான பாடல்களை Spotify வழங்குகிறது, மேலும் இது 180 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, இதனை மொபைல் போனிலும், கம்ப்யூட்டரிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஐரோப்பாவின் பெரும்பகுதி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இச்சேவை உள்ளது. இந்தியாவில் இச்சேவை இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை, விரைவில் எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் இதனை Google Home மற்றும் Amazon Echo உடன் இணைத்து பாடல்களை கேட்க முடியும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்