டெலிகிராம், வாட்ஸாப்பை போன்று செய்திகளை பரிமாற்ற உதவும் செயலி ஆகும், இதில் புகைப்படங்கள், காணொளிகள், ஸ்டிக்கர்கள் மற்றும் கோப்புகள் போன்றவை எந்த வகையில் இருந்தாலும் பரிமாற்றம் செய்ய முடியும்.

டெலிகிராம் 2013 இல் Nikolai மற்றும் Pavel Durov சகோதரர்களால் தொடங்கப்பட்டது. இவர்கள் தான் ரஷியன் சமூக வலைத்தளமான VK-வை நிறுவியவர்கள்.

டெலிகிராமை Android, iOS, விண்டோஸ், விண்டோஸ் NT, MacOS மற்றும் லினக்ஸ் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

டெலிகிராம் வேகமான நம்பகத்தன்மை கொண்ட செயலியாகும், இதில் இரண்டு ஆன்லைன் பயனர்களுக்கு இடையில் உள்ள குரல் அழைப்புகள் (Voice calls) மற்றும் அரட்டைகள் (Chats) போன்றவை end-to-end encryption வசதியைப் பெற்றுள்ளன. ஆனால் இவ்வசதி டெலிகிராமின் குழுக்களுக்கு (Telegram Group) இல்லை.

டெலிகிராம் குழுக்களில் 1,00,000 நபா்கள் வரை இணைக்க முடியும், குழு அட்மின்களுக்குகான தனித்துவமான வசதிகளை இது கொண்டுள்ளது, தகவல்கள் அனைத்தும் மேக கணினியில் (Cloud-based) பதியப்படுவதால் எங்கும் இதனைப் பெறமுடியும்.

அதிக பட்சம் 1.5 GB அளவு வரை உள்ள கோப்புகளை இதில் பரிமாற்றம் செய்ய முடியும். இவையனைத்தும் கட்டணமற்ற, விளம்பரங்களற்ற சேவையாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்