இன்றைய உலகில் இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்று தான் கூற வேண்டும், அந்த அளவுக்கு இதன் தாக்கம் உள்ளது.

இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது, இந்தியாவில் மட்டும் 6 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள்.

தற்போது இன்ஸ்டாகிராமில், சாலேஞ் என்ற புதிய கலாச்சாரம் வேகமாகப் பரவி வருகிறது, சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் கீகீ சாலேஞ் மிகவும் வைரல் ஆகியது தற்போது வந்துள்ளது பால்லிங் ஸ்டார்ஸ் சாலேஞ் (Falling Stars Challenge).

அதென்ன பால்லிங் ஸ்டார்ஸ் சாலேஞ்

நீங்கள் தவறி கீழே விழுந்தாற்போல் உங்களைச் சுற்றி பொருட்கள் சிதறி கிடப்பது போல புகைப்படத்தை கிளிக் செய்து #fallingstars அல்லது #fallingstarschallenge என்ற ​​ஹேஷ்டாகை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்யலாம்.

ஹேஷ்டாக் என்றால் என்ன தெரிந்துக்கொள்வோம்

கீகீ சாலேஞ் இல் உள்ள ஆபத்தை உணர்ந்து நெட்டிசன்கள் இதனை புறக்கணித்துவிட்டனர், ஆனால் புதுமையை விரும்புபவர்களுக்கு பால்லிங் ஸ்டார்ஸ் சாலேஞ் ஆபத்தில்லாதது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்